Tamil Articles

சில்வர் டங்க்டு ஆரேட்டர் மகாகனம் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி | பா.சந்திரசேகரன்

சில்வர் டங்க்டு ஆரேட்டர் மகாகனம் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி | பா.சந்திரசேகரன் சில்வர் டங்க்டு ஆரேட்டர் மகாகனம் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan April 7, 2022 Tamil Articles    மத்திய அரசால் இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ‘அம்ருத் மகோத்சவம்’ என்ற முழக்கத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட உணர்வு, தியாகிகளுக்குப் புகழஞ்சலி, மற்றும் சுதந்திர இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் உறுதிமொழி ஆகியவற்றை உணரும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும், அவர்களின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். மறக்கப்பட்ட தலைவர்களின் பங்களிப்பு, சிந்தனை மற்றும் கருத்துக்கள் தேசிய முயற்சிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது பிரமரின் அறிவுரை. இந்தச் சிறப்பான முன்னெடுப்பில் மாநில அரசுகள் எந்தளவுக்குத் தங்கள் மாநிலத் தலைவர்களை நினைவுகூர்ந்து அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்கள்தம் கருத்துக்களையும் இன்றையத் தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புரியாத புதிராகத்தான் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ரைட் ஹானரபிள் மகாகனம் என்று அழைக்கப்பட்ட மாபெரும் தலைவர் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்களின் 150-வது பிறந்த தினம், தமிழகத்திலும் சரி, தேசிய அளவிலும் சரி, சில பேரால் கூட நினைவு கூரப்படவில்லை. ஸ்ரீனிவாச சாஸ்திரி பல்முனை ஆற்றல் படைத்த மாபெரும் ஆளுமை. இவர் 22 செப்டம்பர் 1869ம் ஆண்டில், தொன்மையான ஆலயங்கள் சூழ் நகரமான கும்பகோணத்தின் அருகில் உள்ள வலங்கைமான் என்ற கிராமத்தில்  பிறந்தார். பிற்காலத்தில் காந்திஜி இவரை அண்ணன் என்று அழைத்தார். அதற்குப் பல காரணங்கள் உண்டு. பொதுவாக இவரை சாஸ்திரியார் என்றே அனைவரும் அழைத்தனர்.                                                                                                                    வலங்கைமான் சங்கரநாராயண ஶ்ரீனிவாச சாஸ்திரி                                                              (22 September 1869 – 17 April 1946) தனிப்பட்ட முறையில் மகாத்மா காந்தி மற்றும் சாஸ்திரி இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனாலும் இவர்களது அரசியல் கொள்கை வாழ்க்கை முழுவதும் முரணாகத்தான் இருந்தது. அதேசமயம் தனிப்பட்ட நட்பை இருவரும் கட்டுக்கோப்பாகக் கடைப்பிடித்தனர். சாஸ்திரியின் நீண்ட பணிகள் பற்றி ஒரு தபால் அட்டை அளவுக்கான தகவல்கள் கூட இங்கே யாருக்கும் தெரியவில்லை. அனைவருக்கும் சம உரிமை, வளர்ச்சி மற்றும் படிப்படியாக முழு சுதந்திரம் என்ற கொள்கையுடன் நாடு பூரண சுதந்திரம் பெற அயராது பாடுபட்ட ஆரம்பக்கட்ட தலைவர்களில், மாபெரும் அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர். சாதாரணப் பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஶ்ரீனிவாச சாஸ்திரி பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தாய் – தந்தைக்கு 1869-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ல் மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். வலங்கைமானில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு சாஸ்திரி அவர்கள் பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பை கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பயின்று 1888-ல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவரது ஆங்கிலப் புலமைக்குப் பரிசாக ரூ.350/- பெற்றார். இந்தத் தொகை அன்றைக்குப் பெரும் தொகை. இவரது தந்தையார் சக புரோகிதர்களை அழைத்துப் பெரிய விருந்தையே அளித்துள்ளார். இவரது தனித் திறமையினால் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை, அன்றைய ஆங்கிலேயே அரசின் கல்வி உதவி மூலம் பெற்றார். பிறகு இன்றைய மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயவரத்திலுள்ள முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.50-க்கு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1891-ல் அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். அப்போது ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஒருநாள் வகுப்பில் பாடம் நடத்தும்போது அவரது ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளது என்று சாஸ்திரி கூறினார். ஆனால் அந்த கல்லூரித் தலைவர் அதை மறுத்தார். கல்லூரியின் தலைவர், தன்னுடைய தாய்மொழி ஆங்கிலம், ஆகையால் தான் சொல்லுவதுதான் சரியான உச்சரிப்பு என்றார். இதை ஏற்கவில்லை சாஸ்திரியார். கல்லூரியின் நூலகத்திலுள்ள பிரபலமான ஆங்கில அகராதியை எடுத்துப் பார்த்ததில், சாஸ்திரி கூறியதே சரியான உச்சரிப்பு என்று புரிந்துகொண்ட கல்லூரித் தலைவர் வியந்துபோய் சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையைப் பாராட்டினாராம். சாஸ்திரி அவர்கள் பிரபல ஆங்கில அகராதியான வெப்ஸ்டர் முழுவதையும் நன்கு அறிந்திருந்தார் என்று பலபேர் பின்னாட்களில் கூறியுள்ளார்கள். 1893ல் சாஸ்திரி அவர்கள் சேலம் முனிசிபல் கல்லூரியில் முதல் நிலை உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலக்கட்டத்தில் அப்போது தென்னிந்தியாவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் அவர்களை அறிந்த பிறகு நாட்டின் பொது வாழ்க்கையில் ஈடுபட அவர் ஆர்வம் கொண்டார். அந்தச் சமயத்தில் தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் மக்களின் துயரங்களைப் பற்றி பல கட்டுரைகள் எழுதி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக, அவர் மேல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆங்கிலேயே அரசு மிரட்டியது. ஆனால் சாஸ்திரி அஞ்சவில்லை. பிறகு சென்னையில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902ல் சாஸ்திரி திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி அந்தப் பள்ளியை அன்றைய மெட்ராஸ் மாகாணத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக உயர்த்தினார். ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு தனது 37-வது வயதில் 1907-ல் முழுமையாகப் பொது வாழ்க்கைக்கு வந்தார். அப்போது பூனாவில் சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி (இந்திய ஊழியர் சங்கம்) என்ற இயக்கத்தை நடத்தி வந்த மகாத்மா கோபால கிருஷ்ண கோகலே அவர்களுடன் இணைந்தார். கோகலே அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சாஸ்திரி அவரையே தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். கோகலேவும் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஆசிரியர் பணியில் இருந்து விலகிப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்தான். அந்தக் காலகட்டத்தில் காங்கிரசில் மகாத்மா காந்தி இந்தியாவுக்கு வரவில்லை. அப்போது பரிபூரண சுதந்திரம் என்ற அறிவிப்பு வராத காலம். சுதந்திரத்தை அடைய எந்த வழியில் போராடப் போகிறோம் என்று அறியாத நிலையில் அப்போதைய காங்கிரஸ், பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்த மிதவாத காங்கிரஸார் வாழ்ந்த காலம். பல்வேறு முக்கியத் தலைவர்கள் மிகத் தீவிரமாக நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் தாதாபாய் நௌரோஜி, மஹாதேவ் கோவிந்த ரானடே, பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜ்பத் ராய், அரவிந்த கோஷ், அன்னிபெசன்ட், ஃபிரோஸ்ஷா மேத்தா, தீன்ஷா வாச்சா, சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்கள். இவர்கள் சமூக மறுமலர்ச்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இவர்களிடையே சில அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. அவர்கள் இரண்டு வகைப்படும். ஒன்று நேரடி எதிர்ப்பு, புரட்சி, தீவிர தேசியவாதிகள். மற்றொன்று வன்முறை இல்லாத போராட்ட முறை. அதாவது மிதவாதப் போராளிகள். இவர்கள் அரசியல் சாசனம், அரசின் சட்டத்திட்ட முறைகளின் மூலம் உயிர்ச் சேதம் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்று எண்ணினார்கள். கோகலே மிதவாதி. சாஸ்திரி கோகலேயைப் பின்பற்றி மிதவாதியானார். தீவிரவாத – மிதவாதக் கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்ததுபோது நேஷனல் லிபரல் ஃபெடரேசன் ஆப் இந்தியா என்ற கட்சியை சாஸ்திரி, தன்னோடு கருத்து ஒற்றுமை உடையவர்களோடு சேர்ந்து தொடங்கினார். அவர்களில் முக்கியமானவர்கள் ஃபிரோஸ்ஷா மேத்தா, தீன்ஷா வாச்சா, சுரேந்திரநாத் பானர்ஜி, தேஜ் பகதூர் சப்ரு, எம்.ஆர்.ஜெய்கர் போன்றவர்கள். சாஸ்திரி 1922ல் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக 1915-ல் கோகலே இறந்தபோது சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியின் தலைவராக சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் அதில் பணியாற்றினார். 1914ல் காந்தி இந்தியா வந்தவுடன் கோகலே நாடு முழுவதும் சென்று மக்களின் பிரச்சனைகளை அறிந்த பிறகு சொசைட்டியில் காந்தியைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.  ஆனால் கோகலே 1915-ல் இறந்து விட்டார். கோகலேவின் சித்தாந்த, அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளை முழுமையாக நாடு முழுக்க எடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார்தான். சாஸ்திரி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் பணியாற்றினார். இந்தியாவில் நடக்கும் வழக்குகளில், இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் இங்கிலாந்தில் இருந்து செயல்பட்ட பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் சாஸ்திரி உறுப்பினராக இருந்தார். இந்த முக்கியப் பொறுப்புகள் மூலம் புதிய அரசியல் சாசனம் மற்றும் அரசின் நிர்வாகம் போன்றவற்றில் சாஸ்திரியாரின் பங்களிப்பு ஏராளம். பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார் சாஸ்திரியார். இந்தச் சட்டத்தின்படி அன்றைய ஆங்கிலேயே அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றிச் சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்பட்ட

சில்வர் டங்க்டு ஆரேட்டர் மகாகனம் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி | பா.சந்திரசேகரன் Read More »

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan March 4, 2021 Tamil Articles  இன்றைய தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியாவில் மற்ற பகுதியிலும் சரி, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற மாமனிதர், ஒரு தமிழர், பல்துறை அறிஞர், நம் நாட்டிற்கு அளித்த பங்களிப்பைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாது. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பது துரதிர்ஷ்டம்.  ராஜாஜி மறைந்து 48 ஆண்டுகள் ஆகின்றன. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு, அவரின் எண்ணற்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் மறைக்கப்பட்டது, எதோ தனி நபருக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பல்ல, வருங்கால சந்ததியினருக்கும் மற்றும் நம் தேசத்துக்கும்தான். சர்வதேச அளவில் மிகச்சிறந்த அரசியல் சாசன, சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர், அறிவுஜீவி மற்றும் பொருளாதார சிந்தனையாளராக போற்றப்பட்டவர் ராஜாஜி. ஆனால் ராஜாஜிக்கு தமிழகத்தில் போதிய மரியாதையும் மதிப்பும் அளிக்கப்படவில்லை. மூச்சுக்கு முப்பது தடவை மூதறிஞர் என்று அரசியல் ஆதாயத்துக்கு மட்டும் அவரை பட்டப்பேர் வைத்து அழைப்பது என்பது தவிர்க்க முடியாமல் போய்விட்டது சில அரசியல் கட்சிகளுக்கு. நமது நாட்டின் மிக உயரிய தேசிய குடிமையியல் விருதான முதல் பாரத ரத்னா விருது ராஜாஜிக்கும் மற்றும் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமணனுக்கும் 1954ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் இரண்டுபேரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவர்கள் பொது வாழ்க்கையிலோ அல்லது தனிப்பட்டமுறையிலோ எங்கும் பயன்படுத்தியதில்லை. ராஜாஜிக்கும் ராமனுக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்கள் கௌரவ முனைவர் பட்டம் வழங்கின. ஆனால் அவர்கள் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் இந்த விருதுகளையெல்லாம் பெறுவது அல்ல. இரண்டுபேருமே ஜவாகர்லால் நேருவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கையை எதிர்த்தார்கள். தன்னலமற்ற தேசத் தொண்டு, தெய்வீகப் பற்று, பொது வாழ்க்கையில் பின்பற்றிய நேர்மை, தூய்மை, தேசியச் சிந்தனை, அறிவியல் பூர்வமான ஆலோசனைகள், ஆக்கபூர்வமாக வெளிப்படுத்திய முற்போக்கான சிந்தனைகள் என்று ஏராளமான விஷயங்களில் ராஜாஜியின் வாழ்க்கை விசாலமானது. எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் எல்லாத் தரப்பு மக்களுக்குமாகச் செயலாற்றியவர் ராஜாஜி. அவரின் நிர்வாகத் திறமையை உலக அறிஞர்கள் போற்றியுள்ளார்கள். ராஜாஜி தேர்ந்த வழக்கறிஞர், சுதந்திரப் போராட்டத் தலைவர், அரசியல்வாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்து எல்லா வடிவங்களிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் 50க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் ராஜாஜி. 1946ம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாண முதலமைச்சராக 1937 முதல் 1939 வரை பதவி வகித்தார், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக (1948 முதல் 1950 வரை) பதவி வகித்தார். 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர். 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுநராகவும், 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் ராஜாஜியை, அரசியலாகட்டும், இலக்கியத் துறையாகட்டும் தமிழக அறிஞர்களாகட்டும், எந்த ஒரு இயக்கமும் போற்றுவதில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு அவரின் கொள்கைகள், கருத்துக்கள் மிகவும் அவசியம் என்பதைப் புரிந்து, அதனைக் கொண்டுசேர்க்க ஒருவருமில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தப் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிடும் ‘நவபாரத் சிற்பிகள்’ என்ற தொகுப்பில், ராஜாஜி பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் 2002ம் ஆண்டுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அதாவது ராஜாஜி அவர்கள் இறந்து முப்பது வருடங்களுக்குப் பிறகு ஆர்.கே.மூர்த்தி என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் எஸ்.கணேசன் என்பவர். இவ்வளவு தாமதம் ஏன்? ராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் முப்பது ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ராஜாஜி இரண்டு முறை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த போது பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அதில் மூன்று மிக முக்கியமானவை: மதுவிலக்கு, புதிய கல்விக் கொள்கை மற்றும் அனைவருக்கும் ஆலய வழிபாடு. சமுதாயத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ப, நடைமுறை சார்ந்த செயல்முறைக் கல்வித் திட்டம்தான் ராஜாஜி கொண்டுவந்த கல்விக் கொள்கை. அந்த கல்விக் கொள்கையைப் பாமர மக்களிடையே பொய்யான கருத்தைப் புகுத்தித் திசைதிருப்பிவிட்டார்கள் சில தேச விரோதிகள். நாட்டின் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த ராஜாஜி எப்படி பிறகு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படலாம் என்றும் வினவுகிறார்கள் சிலர். அன்றைக்கு மட்டும் ராஜாஜி தமிழகத்தின் முதல்வராக வரவில்லை என்றால் கம்யூனிசம் என்ற தேச விரோத தீய சக்தி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்குவகித்து மாநிலத்தை குழிதோண்டிப் புதைத்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பூரண மதுவிலக்குக்கு ஆதரவாக ‘விமோசனம்’ என்ற ஒரு தனி இதழையே நிறுவி நடத்தியவர் ராஜாஜி. அவர் இறப்பதற்கு முன்பு அன்றைய காலகட்டத்தில் அவரால் ஆட்சிக்கு வந்த கட்சியின் முதல்வரை நேரில் பார்த்து பூரண மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் ராஜாஜி. இன்றைய தமிழக மது எதிர்ப்புப் போராளிகள் அவரை மறந்துவிட்டார்கள். இன்றைய தலைவர்களின் கருத்துக்கும் அவர்களின் நிஜவாழ்க்கை நடத்தைக்கும் எந்த வித்தியாசமில்லாமல் போய்விட்டது. ஆனால் ராஜாஜி அப்படி இருக்கவில்லை. ராஜாஜி கொண்டுவந்த புதிய கல்வித்திட்டம் இன்று மேலை நாடுகளில் பரவலாகச் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் சுயதிறன் வளர்ப்பு என்பற்றை மிக முக்கியக் குறிக்கோளாக அனைத்து மேலைநாடுகளும் பின்பற்றிவருகினறன. அதைத்தான் ராஜாஜி என்றே கல்வித்திட்டத்தில் கொண்டுவந்தார். ஆனால் என்னவென்று தெரியாமலேயே அதை வேண்டுமென்றே திரித்துப் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, ராஜாஜி எடுத்துரைத்ததுபோல பல்வேறு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ராஜாஜியின் கல்விக் கொள்கையைப் படிக்காமலேயே இன்றும் சிலர் ‘குலக் கல்வித் திட்டம்’ என்று திட்டமிட்டே மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ராஜாஜி சொன்ன குலக்கல்விக்கும் இன்றைய தொழில் கல்விக்கும் என்ன தொடா்பு என்று வினவுகிறார் தேர்ந்த அரசியல் தலைவர் கே.பி. இராமலிங்கம். அவர் மேலும் கூறுகிறார்: ‘அடிப்படைக் கலைகள், கைவினைப் பயிற்சிகள், விளையாட்டு, உடல்திறன், மொழி, இலக்கியம், பண்பாடு, சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் அறிவியலும் கணிதமும் கற்றுக் கொடுக்கப்பட்டு, மாணவா்களை அனைத்துத் துறைகளிலும் தகுதி பெற்றவா்களாக வளா்த்தெடுக்க வேண்டும் என்று இந்த புதிய கல்விக் கொள்கை தீா்மானித்திருக்கிறது. கல்வி என்பது மாணவா்களுக்குப் பயனளிப்பதோடு அவா்களின் ஆளுமையைச் செதுக்கக் கூடியதாகவும் அவா்களை அறவிழுமியங்களைக் கடைப்பிடிப்பவா்களாகவும், அறிவுபூா்வமாக சிந்திப்பவா்களாகவும், அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றவா்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் லட்சியம்.’ இதைத்தான் ராஜாஜியும் அன்றே யோசித்தார். ‘சுயஒழுக்கம், கட்டுப்பாடுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. அதுவே அவனது கலாசாரம், அந்த கலாசாரமே சமூகத்தின் அச்சாணி. அந்த அச்சாணியே மனித இனத்துக்கு அனைத்து வகையிலும் அமைதி வழியில் வளர்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும்’ என்பது ராஜாஜியின் எண்ணம். 1939ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியான ராஜாஜி, ஆதி திராவிட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்குச் சட்டம் பிறப்பித்தார் என்பதை இன்று தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க மறுக்கின்றனர். ராஜாஜி நேரடியாக கம்யூனிசத்தை எதிர்த்தவர். கம்யூனிச சித்தாந்தத்தால் நமது நாட்டுக்கு எல்லாவிதத்திலும் அழிவுதான் ஏற்படும் என்பதை தீர்க்கமாக வெளிப்படுத்தியவர். ராஜாஜி மற்றும் ஜவாஹர்லால் நேருவுக்கும் இடையே கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின. நம் நாட்டுக்கு எந்தக் கொள்கை உகந்தது என்பதில் நேரு பல வகையில் தவறிவிட்டார். அதை ராஜாஜி சுட்டிக்காட்டத் தவறவில்லை. ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்பதை நம் கடந்த எழுபது ஆண்டு வரலாறு பிரிதிபலிக்கிறது. இன்று நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ள வரி விதிப்பு முறையை அன்று ராஜாஜி முதன்முதலில் அமுலுக்குக் கொண்டு வந்தார்! நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜி ‘சுதந்திராக் கட்சி’யை நிறுவுவதற்கு முன்பு ‘இந்திய தேசிய சனநாயக காங்கிரசு’ (1957–1959) என்ற கட்சியை நடத்தி வந்தார் என்பது பலபேருக்குத் தெரியாது. ராஜாஜி இந்திய பாரம்பரியமிக்க, தாராளமயத்தைக் கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962, 1967 மற்றும் 1972 பொதுத் தேர்தல்களில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்க்கட்சியாக விளங்கியது. சென்னையை தமிழகத்துக்குக் காத்துக் கொடுத்தவர் ராஜாஜி. அதேபோல் கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைத்துக் கொடுத்தவரும் இவரே. ஆரம்பகட்ட சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் பாலகங்காதர திலகரின் குழுவில் செயல்பட்டவர் ராஜாஜி. அப்போது மகாத்மா காந்திஜி இந்தியாவிற்கு முழுவதுமாகத் திரும்பி இருக்கவில்லை. சுதந்திரப் போராட்டக் காலம்தொட்டு, தன் இறுதி நாள் வரை ராஜாஜி நாட்டுக்காக யோசித்தார், எழுதினார், செயல்பட்டார். ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்குச் சிறப்பாகப் பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை எழுதி உள்ளார். நாட்டின் நிதிச்சுமையைக் கருதி அன்றே ராஜாஜி எடுத்துரைத்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கத்தை இன்றைய பாரதப் பிரதமர் திடமாக நம்புகிறார். இதுபோல் ராஜாஜி எண்ணற்ற, தேச நலன் சார்ந்த பல கருத்துக்களை அன்றே எடுத்துரைத்துள்ளார். காலத்தின் முன்னோடி ராஜாஜி. ராஜாஜியின் கருத்துகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லவேண்டியது நமது தலையாய கடமை.   https://valamonline.in/2021/03/rajaji.html#more-2714             Facebook Instagram X-twitter

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன் Read More »

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன் சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan February 9, 2021 Tamil Articles இருபதாம் நூற்றாண்டில் உலக அறிஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட மாபெரும் அறிவியல் அறிஞர் சந்திரசேகர வெங்கட ராமன் (சி.வி.ராமன்). அவர் இறந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திர இந்தியாவின் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சியில் ராமனின் எண்ணமும் ராஜகோபாலாச்சாரியின் எண்ணமும் ஒன்றாக இருந்தது என்பதை வெகுசிலரே அறிவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1954ம் ஆண்டு இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதான முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இருவரும் அவர்கள் எடுத்துக்கொண்ட துறையில் தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்களாகவும் மற்றும் உலகளவில் மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் விளங்கினார்கள். ராமன் அவர்களுக்கு உலகம் முழுவதும், இந்தியாவிலும், நூற்றுக்கணக்கான விருதுகளும் மற்றும் கவுரவ முனைவர் பட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சி.வி.ராமனின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள், பொதுமக்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ராமனின் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பான ‘ராமன் விளைவு’ கோட்பாட்டை அறிவித்த நாளான பிப்ரவரி 28ம் தேதியை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 1986 முதல் தேசிய அறிவியல் தினமாகக் கடைப்பிடிக்கிறது என்பதுதான் அதற்குக் காரணம். அடிப்படை அறிவியல் சிந்தனையை மாணவர்களிடையே வளர்ப்பதுதான் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்று திடமாக நம்பினார் ராமன். ஒவ்வொரு ஆண்டும் அரசு கடைப்பிடிக்கும் தேசிய அறிவியல் தினம் மூலம் அவரின் இந்த நீண்டநாள் கனவு முழுமையாக நிறைவேறியதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அறிவியல் வளர்ச்சி நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்று எண்ணினார் ராமன். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் அடிப்படை அறிவியல் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். இவரது சிந்தனைகளை நாட்டின் பொருளாதார மற்றும் அறிவியல் கொள்கைகளில் இந்திய அரசு பல பத்தாண்டுகள் கண்டுகொள்ளவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவர் உருவாக்க நினைத்த அறிவியல் வளர்ச்சி என்பதே வேறு என்பதை இன்றும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ராமன் அவர்கள் தாராள சந்தைப் பொருளாதாரத்தை 1950களிலேயே ஆதரித்துப் பேசியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் பெரும்பாலும் ராமனின் பொருளாதாரச் சிந்தனைகளைப் புறம் தள்ளினார்கள். முற்போக்கான ஜனநாயகம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தனிமனித சுதந்திரமும் முக்கியம் என்று எண்ணினார் ராமன். அவர் 1952ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது கட்டுரையில் கூறினார், ‘சோவியத் நாட்டின் அதிகாரக் குவியலை மைப்படுத்தி தனிமனித சுதந்திரத்தையும், தனியார் நிறுவனங்களையும் அரசு முடக்க நினைப்பது நம் நாட்டுக்கு அழிவுதான். தனிமனித சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் திளைக்காது. அது ஒரு பொய்க்காட்சியாகத்தான் இருக்கும்.’ பொதுவாகவே ராமன் அவர்களுக்கு இயற்கையின் மேல் அதீத ஈர்ப்பு சிறுவயது முதலே உண்டு. அதுவும் வண்ணங்கள் என்றால் அளவுகடந்த ஈர்ப்பு இருந்தது. நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாகவே தனது பல்வேறு ஆக்கபூர்வமான ஆய்வு மூலம் ராமன் இயற்பியல் துறையில் உலக புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளராக அறியப்பட்டவர். 1968ம் ஆண்டு ஒரு கட்டுரையில் அவர் கூறினார், ‘கண்களைத் திறந்து, காதுகளையும் விசாலமாக வைத்து இயற்கையை உற்றுநோக்கி நேசித்தால் அறிவியல் சிந்தனைகள் தானாக வளரும்.’ இதை நம் பள்ளிகள் செய்வதில்லை. ராமன் தனது 42வது வயதில் 1930ம் ஆண்டு ‘ராமன் விளைவுக் கோட்பாட்டுக்காக’ நோபல் பரிசு பெற்றார். அன்றைய காலகட்டத்தில் ஆசியக் கண்டத்திலேயே இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் ராமன் ஒருவரே. நோபல் பரிசு அறிவிப்புக்கு ஆறு மாதத்துக்கு முன்னதாகவே நார்வே நாட்டுக்குக் கப்பல் மூலம் சென்றார் ராமன். தனது அறிவியல் கண்டுபிடிப்பில் அவ்வளவு ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார் அவர். பிரிங்ஷ்எய்ம் மற்றும் ரோசன் என்ற ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆய்வாளர்கள்தான் முதன் முதலில் ராமனின் அறிவியல் கண்டுபிடிப்பை ‘ராமன் விளைவு கோட்பாடு’ என்று கூறினார்கள். இந்தக் கண்டுபிடிப்புக்காக ராமன் செலவு செய்தது ரூ.200 முதல் ரூ.500 வரைதான் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொகை ஒரு பெரும் தொகைதான். ஆனால் ராமன் நோபல் பரிசு பெற்றதை ஒரு பகுதியினர் ஏற்க மறுத்தனர், அவர்கள்தான் கல்கத்தா-அல்கஹாபாத் அறிவியல் அமைப்பைச் சார்ந்தவர்கள். சி.வி.ராமன் நவம்பர் 7, 1888ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் திருவானைக்காவலில் பிறந்தார். அவர் கூடப்பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அவரின் தந்தை இரா.சந்திரசேகர் ஐயர், தாயார் பார்வதி அம்மையாருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை கணக்கு மற்றும் இயற்பியல் ஆசிரியர். ராமனின் தந்தை பணி மாறுதல் பெற்று விசாகப்பட்டினத்தில் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ராமன் தனது பள்ளிப்படிப்பை விசாகப்பட்டினத்தில் பயின்று தேர்ச்சி பெற்றார். பிறகு 1904ம் ஆண்டு மெட்ராஸ் மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B.A இயற்பியல் பட்டப்படிப்பை சிறப்புத் தகுதியுடன் தேர்ச்சிபெற்று M.A இயற்பியல் பட்டப்படிப்பை அதே கல்லூரியில் முடித்தார். ராமன் 1907ம் ஆண்டு M.A இயற்பியல் முதுகலை பட்டப்படிப்புத் தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் நிதித்துறைத் தேர்வு எழுதி அதில் முதலிடம் பெற்றார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் கல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராகப் பணியாற்றினார். ராமன் நிதித்துறையில் பணியாற்றினாலும் அவரின் கவனம் முழுவதும் அறிவியலில் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. 1907ம் ஆண்டு முதல் 1917ம் ஆண்டு வரை பத்தாண்டுகளாக தினமும் காலை பணிக்குச் செல்லும் முன் மற்றும் மாலை பணியில் இருந்து வீடு திரும்பிய பிறகு அவர் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் 30 கட்டுரைகளை, உலக அளவில் அறிவியல் துறையில் முதன்மையாக விளங்கும் நேச்சர் போன்ற இதழ்களில் பிரசுரித்துள்ளார். ராமனின் இந்த அறிவியல் ஆர்வம் கடைசிக்காலம் வரை குறையவேயில்லை. ராமன் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும்போதே, 18 வயதில் அவரின் முதல் ஆய்வுக் கட்டுரை 1907ம் ஆண்டு நவம்பர் மாத Philosophical Magazine என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டது. அரசு துறையில் பணியாற்றியபோது, ஒரு நாள் வீடு திரும்பும்போது ற்றி அறிந்துகொண்டார். பிறகு கொல்கத்தாவில் மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் (1833-1904) நிறுவப்பட்ட ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ (IACS) என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைத்து பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார். 1919ல் IACS-யின் செயலாளராகப் பணியாற்றினார். ரங்கோன், நாக்பூர் போன்ற நகரங்களில் பணியிடம் மாறுதல் பெற்றார். இதன் மூலம் அவரின் அறிவியல் ஆய்வு பணி சிறிது தாமதமானது. ராமன் 1917ம் ஆண்டு தனது நிதித்துறைப் பணியை விட்டு விலகி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த முதல் சார் தாரக்நாத் பாலித்தில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் அறிவியல் ஆய்வை மேற்கொண்டு அடிப்படை அறிவியல் சிந்தனை மற்றும் ஆர்வத்தை மாணவர்களிடையே அயராது ஊக்குவித்தார். 1924ம் ஆண்டு லண்டனிலுள்ள இராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் பேராசிரியர் ராமனுக்கு வழங்கப்பட்டது. பிறகு ராமன் 1933ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதல் இந்திய இயக்குநராகவும் இயற்பியல் பேராசிரியராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1948ம் ஆண்டு தொடங்கினார். அதற்கு முன்பு ராமன் அவர்கள் சென்னையில் மைலாப்பூரில் தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உருவாக்க முயன்றார். ஆனால் பிரதமர் நேருவின் தடையால் அந்த முயற்சி நின்றுபோனது. ‘விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் அணுகுமுறை’ மற்றும் நேருவின் கொள்கையை ராமன் நிராகரித்தார். மேலும் ‘காளான்களைப் போல பெருகிய சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களை விவரிக்க அவர் ‘நேரு-பட்நகர் விளைவு’ என்ற சொற்றொடரை உருவாக்கினார், பெரும் தொகைகளை செலவழித்தாலும் அவை சிறிதளவே சாதிக்கும் என்று கணித்துள்ளார்’ (ஷான் காஷ்யப், 2018). இந்தியாவில் உலகளாவிய ஆழ்ந்த தொலைநோக்கு கொண்ட அறிவியல் சிந்தனையை வளர்ப்பதைத் தனது முக்கியக் குறிக்கோளாக வைத்திருந்தார் ராமன். மாணவர்களிடையே மற்றும் அறிவியல் ஆய்வாளர்களிடையே முற்போக்கான ஆக்கப்பூர்வமான அறிவியல் அறிவை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். பல்நோக்கு அறிவியல் ஆய்வை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களை நிறுவி தலைமை தாங்கினார். குறிப்பாக 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார் ராமன். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தை (Indian Science Academy) உருவாக்கி பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றினார். அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முனைப்புடன் செயலாற்றினார். அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ்பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார். 1928ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று இந்திய இயற்பியல் ஆய்விதழைத் தொடங்கி (Indian Journal of Physics) தனது கூட்டு ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் முடிவுகளை வெளியிட்டார். இந்தப் புதிய அறிவியல் ஒளி விளைவுதான் ராமனுக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. ராமன் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை இந்திய ஆய்விதழில் வெளியிட்டு உலகமுழுவதும் பெரும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டிலேயே அறிவியல் ஆய்வுக் கருவிகளை உருவாக்கும் திறனை வளர்க்க அயராது உழைத்தார் ராமன். ஆனால் சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் அடிப்படை அறிவியல் ஆய்வுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதை வெளிப்படையாகவே ராமன் கூறியுள்ளார். ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்காக வல்லுநர்கள் கூறும் கருத்தை ஏற்கவில்லை என்பதை ராமன் ஆழமாகத் தனது எழுத்துக்கள் மூலம் பதிவு செய்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சிக் கொள்கைகளை ராமன் எதிர்த்தார். பிரதமர் நேரு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய அறிவியல் ஆலோசகர்கள் சிலர், நாட்டின் நலனை கருத்தில்கொண்டு

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன் Read More »

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன் ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan November 1, 2020 Tamil Articles                                            (அமர்ந்திருப்பவர்கள்: காந்தி, கஸ்தூர்பா.நின்றிருப்பவர்களில் வெள்ளை தலைப்பாகை அணிந்திருப்பவர்: ஜி.ஏ.நடேசன்) இந்த கொரானா பெருந்தொற்று நோய்க் காலத்தில் பல்வேறு தொழில் துறைகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பாதிப்புக்குள்ளான துறைகள் எந்தளவுக்கு தங்களது நிறுவனத்தைத் திறமையாக நிர்வகித்தார்கள்,  நவீன தொழில்நுட்பத்தை எந்தளவுக்கு உள்வாங்கியுள்ளார்கள் என்பதைப் பொருத்து பாதிப்பு மாறுபடுகிறது. கொரானாவால் அனைத்துத் தரப்பையும் போலவே பதிப்பகம் மற்றும் அச்சு ஊடகம் சம்பந்தப்பட்ட துறைகளும் மிகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதனால் வருவாய் இழப்பு, வேலை இழப்பு, புதிய வேலைவாய்ப்பு குறைவு என இக்கட்டான சூழ்நிலை எழுந்துள்ளது. இதற்கு முன்பு இத்துறை சிறப்பாக இருந்ததா என்பது வேறு ஒரு விவாதம். முன்பு இருந்த அளவுக்குக் கூட இன்றைய நிலையில் இல்லை என்பதே முக்கியமானது. பெரும் இக்கட்டான சூழ்நிலையில் எதாவது ஒரு புதிய வெளிச்சம் அல்லது புதிய வாய்ப்பு உருவாகும் என்பது இயற்கையே. அந்தப் புதிய வாய்ப்பு என்னவென்றால் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் வாசிப்பு அதிகமானதுதான். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எப்படிச் சமாளித்தார்கள்? இந்த அச்சு, ஊடக, பதிப்பு, நூல் வெளியீட்டுத் துறையின் மூலம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய நம் தலைவர்கள் இச்சூழலை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது புதிராகத்தான் உள்ளது. தேசப்பற்றாளர்களின் தன்னலமற்ற பெரும் உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டுமக்களை ஊக்குவிக்க எடுத்த முயற்சிகளும் அபாரமானவை. தேசப்பற்றை மறந்துவிட்டு ஓடும் இந்தக் காலத்தில் அதை எல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட நாம் மறந்துவிட்டோம். இன்றைய ஊடகச் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நீரோட்டத்தில், தமிழகத்தில் கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன் என்ற ஜி.ஏ.நடேசன் அவர்களின் பங்களிப்புப் பற்றியெல்லாம் படிக்கவோ எழுதவோ ஒருவருமில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரலாற்றில் ஜி.ஏ.நடேசன் அவர்களின் பங்களிப்பு அபாரமானது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. அத்திப்பூ போல 2012ம் ஆண்டு எழுத்தாளர் பெ.சு.மணி எழுதிய ‘ஜி.ஏ.நடேசன் -பதிப்பாளர் – இதழாளர் – தேசபக்தர்’ என்ற நூல் வெளியானது. அந்த நூலை வெளியிட்டு மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கம் கூறினார்: “நடேசன் போன்று தேசத்துக்காகப் பாடுபட்ட பல பெரியவர்கள் நினைவுகூரப்படாமலே உள்ளனர். எனவே, தேசத்துக்காகப் பாடுபட்ட அனைவர் குறித்தும் நூல்கள் வெளிவர வேண்டும். இல்லையெனில், இளைஞர்கள் மத்தியில் தவறான சரித்திரம் நிலைபெற்றுவிடும்.” ஜி.ஏ.நடேசன் தான் ஈடுபட்ட அனைத்துத் துறைகளிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர். ஜி.ஏ.நடேசன்தான் மகாத்மா காந்தியை தென்னிந்தியாவுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். நடேசன் அவர்களின் வீட்டில்தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் முதன்முதலில் காந்தியை சந்தித்தார். ஜி.ஏ.நடேசன் அவர்கள் நிறுவிய ஜி.ஏ.நடேசன் & கோ என்ற பதிப்பகம் இந்திய தேசிய விடுதலை உணர்வுகளை வளர்ப்பதற்கான நூல்களை வெளியிடுவதில் முக்கியப் பங்காற்றியது. மேலும் அவர் ‘தி இந்தியன் ரெவ்யூ (The Indian Review)’ என்ற மாதாந்திரப் பத்திரிகையை நிறுவி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆசிரியராக இருந்து அதில் தலையங்கமும் எழுதினார். 1909ம் ஆண்டு எச்.எஸ்.எல்.போலக் எழுதிய ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை முதன்முதலில் ஆங்கிலத்தில் வெளியிட்டவர் ஜி.ஏ.நடேசன்தான். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான தலைவர்கள் தேச ஒற்றுமையை மக்களிடம் கொண்டுசெல்ல நாடெங்கிலும் பல்வேறு காலகட்டங்களில் மிகச்சிறந்த உரைகளை நிகழ்த்தினார்கள். அதன் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து ஆட்சி, அதிகார மற்றும் அடக்குமுறையை மாற்றியமைக்க முயன்றார்கள். இந்த சுதந்திரப் போராட்ட நீரோட்டத்தை இந்திய மக்களிடம் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குக் கொண்டுசெல்ல ஜி.ஏ.நடேசன் அரும்பாடுபட்டார். பல்வேறு சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உரை மற்றும் எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்து நூல்களாக மலிவு விலையில் வெளியிட்டார். இன்று அப்படியொரு பதிப்பகம் இல்லை என்றே சொல்லலாம். இன்றைய தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் திருவையாற்றுக்கு மிக அருகில் உள்ள கணபதி அக்ரகாரம் எனும் கிராமத்தில் ஜி.ஏ.நடேசன், அண்ணாதுரை ஐயர் அவர்களுக்கு மகனாக ஆகஸ்டு 24, 1873ம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் மூத்த சகோதரர் ஜி.ஏ.வைத்தியராமன். நடேசன் இரண்டு வயது இருக்கும்போதே அவரின் தந்தை இறந்துவிட்டார். பிறகு மூத்த சகோதரர்தான் இவருக்கு எல்லாமும். ஜி.ஏ.நடேசன் தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்திலும் திருச்சிராப்பள்ளியிலும் முடித்தார். பிறகு மெட்ராஸ் மாநில கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பை 1897ல் முடித்தார். அயர்லாந்தில் பிறந்த கிளைன் பார்லோ (Glyn Barlow) ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, அவரிடம் பயிற்சிபெற சிறிது காலம் அந்தப் பத்திரிகையில் பணியாற்றினார். 1897ம் ஆண்டு ஜி.ஏ.நடேசன் & கோ என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தைச் சொந்தமாகத் துவக்கினார். இந்த நிறுவனம் மிகவும் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தது. மேலும் அதே ஆண்டு ‘தி இந்தியன் பாலிடிக்ஸ் (The Indian Politics)’ என்ற ஆங்கில இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் இருந்தார். அதன் முக்கிய நோக்கம் மக்களின் குரலையும் கருத்துக்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கொண்டுசேர்ப்பது மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கு வலுசேர்ப்பது போன்றவை. ஆனால் சிறிது காலம்தான் இந்த இதழ் வெளிவந்தது. 1900ம் ஆண்டு, தி இந்தியன் ரெவ்யூ (The Indian Review) என்ற ஆங்கில மாத இதழை நிறுவி வெளியிட்டார் ஜி.ஏ.நடேசன். இந்த இதழின் ஆசிரியராக அவர் ஐம்பது ஆண்டுகள் இருந்தார். இந்த இதழின் பிரதிகளைப் படித்தால், பாரத நாட்டின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அணுஅணுவாக அப்படியே பிரதிபலித்திருப்பது புரியும். இந்த இதழின் முக்கிய நோக்கம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு தேசிய அளவில் ஒரு விவாதத் தளம் அமைத்து, பொருளாதாரம், வேளாண்மை, இலக்கிய விமர்சனங்கள், விளக்கப் படங்கள் போன்றவை பற்றி ஆக்கப்பூர்வமாக விளக்கமளித்தல்; மக்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்து தகுந்த கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருதல் போன்றவை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்: “அன்னிபெசன்ட் மொழிபெயர்த்த கீதை தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை ஜி.ஏ.நடேசன் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அவர் நடத்திய இந்தியன் ரெவ்யூ பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகளை ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்கள் வரை அனைவரும் படிப்பார்கள். நடேசன் நடத்திய இந்தியன் ரெவ்யூவில் மகாத்மா காந்தி 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.” ஆரம்பம் முதல் பல வருடங்களாக தி இந்தியன் ரெவ்யூ பத்திரிகையில் பிரதானமாகக் கட்டுரைகள் எழுதியர்வகள் மகாத்மா காந்தி, கோபாலகிருஷ்ண கோகலே, திலக், நேரு, ஜான் மாத்தாய், நாராயண் சந்தாவர்கர், சுரேந்திரநாத் பானர்ஜீ, சப்ரு, அகா கான், வி.கிருஷ்ணசுவாமி ஐயர், மதன் மோகன் மாளவியா, சி.பி.ராமசுவாமி ஐயர், தாதாபாய் நவ்ரோஜி, ஆர்.சி.தத், சி.எஃப்.ஆன்ட்ரோஸ், பி.எஸ்.சிவசாமி ஐயர், வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி, அன்னிபெசன்ட் போன்றோர். மேலும் பல பிரிட்டிஷ் எழுத்தளார்களும் இந்த மாத இதழில் கட்டுரைகள் எழுதித் தடம் பதித்துள்ளனர். பல கைகள் மாறி 1970ல் டி.டி.கிருஷ்ணமாசாரி அவர்கள் ‘இந்தியன் ரெவ்யூ’ பத்திரிகைக்கு உயிர் கொடுத்தார். 1974ல் அவர் நோய்வாய்ப்படும் வரையில் அதில் தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தார். பிறகு 1980ல் இந்தப் பத்திரிகை முற்றிலும் கைவிடப்பட்டது. மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ஏ.நடேசன், பின்னர் காந்திஜியின் சில கொள்கைகளில் மாறுபட்டார். இருப்பினும் கடைசிவரை காந்தி நடேசனுடன் நட்பு பாராட்டினார். காந்தியின் சத்தியாகிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்ட முறைகளில் நடேசனுக்கு சற்றும் ஈடுபாடு இல்லை. ஏனென்றால் அவர் அடிப்படையில் கோகலேவின் தீவிரவாதக் கொள்கையைப் பின்பற்றினார். காந்தி தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டபோதிருந்தே, ஜி.ஏ.நடேசன் காந்தியுடன் தொடர்பில் இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது 1896ல் இருந்தே கடிதம் மூலம் காந்தியைத் தொடர்பு கொண்டார். காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்திற்கு நிதி உதவி அனுப்பியவர்களில் ஜி.ஏ.நடேசனும் அடங்குவார். 1915ம் ஆண்டு மகாத்மா காந்தி முதன்முதலாக மெட்ராஸுக்கு வரும்போது ஜி.ஏ.நடேசன் வீட்டில் தங்கினார். அவர் அப்போது ஜார்ஜ் டவுனில் உள்ள தம்பு செட்டித் தெருவில் குடியிருந்தார். காந்தி ஏப்ரல் 17 முதல் மே 8 வரை நடேசனின் வீட்டில் தங்கி இருந்தார். இங்குதான் ராஜாஜி காந்தியை முதன்முதலில் நேரில் சந்தித்தார். அதுவரையில் அவரும் காந்தியுடன் கடிதம் மூலமே தொடர்பில் இருந்தார். காந்தியை அழைத்துவர மெட்ராஸ் சென்ட்ரல் இரயில் நிலையம் சென்றிருந்த ஜி.ஏ.நடேசன், இரயில் வந்தபிறகு காந்தியை முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் தேடினார். காந்தியைக் காணவில்லை. சென்று இருந்தவர்களுக்கு எல்லாருக்கும் ஆச்சரியம். பிறகுதான் தெரிந்தது காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூர்பா காந்தி இருவரும் மூன்றாம் வகுப்பில் பயணம்செய்து வந்துள்ளார்கள் என்பது. ஜி.ஏ.நடேசனுக்கு காந்திஜி ஒருமுறை முழுக்க முழுக்க தமிழிலேயே கடிதம் எழுதியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களை மெட்ராஸுக்கு காந்தி அனுப்பியபோது ஜி.ஏ.நடேசன்தான் அவர்களுக்கு உதவி புரிந்தார் என்பதை காந்தியே பல இடங்களில் தெரிவித்துள்ளார். ஜி.ஏ.நடேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி துவங்கிய இந்திய லிபரல் கட்சியில் இணைந்தார். இந்திய லிபரல் கட்சியின் முதல் தேசிய இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922 முதல் 1947 வரை லிபரல் கட்சியின் மெட்ராஸ் செயலாளராக ஜி.ஏ.நடேசன் இருந்தார். 1923ல் மற்றும் 1931ல் என இரண்டு முறை மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1933ல் இந்திய சுங்கவரி வாரியத்தின் முழுநேர உறுப்பினராக இருந்தார். அப்போது மெட்ராஸில் உருவான மில் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார். ஜி.ஏ.நடேசன் கனடா நாட்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பார்லிமெண்டரி குழுவின் (Empire Parliamentary Association) கூட்டத்தில் கலந்து கொண்டார். 1938ல் மெட்ராஸ் நகரத்தின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார். ஜி.ஏ.நடேசன் கிட்டதட்ட கால் நூற்றான்று காலம் மெட்ராஸ் நகராட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகம் மற்றும் அரசுத் துறை சார்ந்த விஷயங்களில் சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையைச் செயல்படுத்துவதில் பெரும் பங்களித்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டுகள் பல்வேறு பொறுப்புகள் ஏற்றுப் பணியாற்றிப் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் தரமான கல்வியை உருவாக்க அரும்பாடுபட்டார். பிறகு தானாக முன்வந்து பல்கலைக்கழகப் பணியில் இருந்து விலகினார். ஜி.ஏ.நடேசன் பல வரலாற்றுச் சிறப்பு வாய்த்த நூல்களையும் கட்டுரைகளையும்

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன் Read More »

தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன்

தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன் தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan October 1, 2020 Tamil Articles   கடந்த அரை நூற்றாண்டாக இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி அனைத்து நிலைகளிலும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. அந்தக் கட்சியைப் போல் ஜனநாயக ஆட்சிமுறையை வேரறுத்தவர்களை நினைவுக்கு எட்டியவரை பார்க்கமுடியாது. அந்த அளவுக்கு அதலபாதாளத்துக்கு தள்ளியது அந்தக் கட்சியின் தலைமைதான் என்பது உரறிந்த உண்மை.  மக்களின் மன மாற்றத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், அமைப்புரீதியான மாற்றம் அந்தக் கட்சியில் ஏற்பட்டு இருக்கும். மாபெரும் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கட்சி, நாடு சுதந்திரம் பெற பாடுபட்ட கட்சி, அதன் முன்னாள் தலைவர்களையும் அவர்கள் வளர்த்த ஜனநாயக மாண்புகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தவறாக வழிநடத்தப்பட்ட அரசர்களைப் பற்றிக் கேள்விதான் பட்டியிருப்போம். ஆனால் இங்கு ஒரு சர்வாதிகாரக் குடும்பமே நிகழ்காலத்தில் ஒரு மாபெரும் அரசியல் கட்சியை எப்படியெல்லாம் நடத்தக்கூடாதோ அப்படியெல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் மக்களை மதிக்கவே இல்லை என்பதுதான் இதற்குப் பொருள். மாபெரும் தேசியத் தலைவர், சுதந்திரப் போராட்டவீரர், அரசியல் சாசன வழிகாட்டி, “தென்னிந்தியாவின் சிங்கம்” என்று போற்றப்பட்டவர் சேலம் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார். அவர் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்யேற்ற நூறாவது ஆண்டு இந்த ஆண்டு. தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன் மோகன் மாளவியா, பாலகங்காதர திலகர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி போன்ற தேசியத் தலைவர்களுடன் சுதந்திரப் போராட்டத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பங்கு வகித்தவர் இவர். இன்று அவரின் தேசப் பங்களிப்பைப் பற்றிப் பேசவோ அல்லது எழுதவோ யாருமில்லை என்பது பெரும் வருத்தத்திற்குரியது. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மகாசபை 1920ம் ஆண்டு நாக்பூரில் விஜயராகவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான பெருமை இவரையே சேரும். இந்த கூட்டத்தில்தான் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் ரெளலட் சட்டத்திற்கு எதிராக போராடிய காலகட்டம் அது. அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இந்த மாநாட்டில்தான் அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபையினால் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டார். ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதுவரை தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகத்தான் திகழ்ந்தார் அவர். 1932ம் ஆண்டில் அலகாபாத் நகரில் நடந்த சர்வ கட்சிக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார் விஜயராகவாச்சாரியார். 1885ம் ஆண்டு மும்பையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டில் ஆலன் ஆக்டவியன் ஹியூம், உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பிரோஸ்ஷா மேத்தா, வில்லியம் வெட்டர்பர்ன், தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா, எஸ்.சுப்ரமணிய ஐயர், ஜி.சுப்ரமணிய ஐயர் (“தி இந்து” மற்றும் “சுதேசமித்திரன்” பத்திரிகைகளைத் தொடங்கியவர்) போன்றோர் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் விஜயராகவாச்சாரியார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவர் ஆலன் ஆக்டவியன் ஹியூம்-உடன் அதற்கு முன்பே தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயராகவாச்சாரியார் தனது 36வது வயதில் மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று கட்சியின் அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் முக்கிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1899ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மதுவிலக்கு, நிலச் சீர்திருத்தம், குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண்களுக்குச் சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்புப் போன்ற திட்டங்களை நாட்டின் சுதந்திர லட்சியங்களுடன் இணைத்த பெருமை விஜயராகவாச்சாரியாருக்கு உண்டு. சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார் ஜூன் 18, 1852 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகில் உள்ள பொன்விளைந்த களத்தூர் என்ற கிராமத்தில் சடகோபாசாரியாருக்கும், கனகவள்ளி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். அவரின் தந்தையார் சமஸ்கிருதம் மற்றும் தரமசாஸ்திரங்கள் அறிந்த அறிஞர். விஜயராகவாச்சாரியார் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை மதுராந்தகத்தில் 1868ம் ஆண்டு முடித்துவிட்டு பச்சையப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை 1870ல் முடித்தார். 1871ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பை 1875ம் ஆண்டு முடித்துவிட்டு அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு மங்களூர் அரசுக் கல்லூரிக்குப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். நேர்மையாக அவர் அங்கு பணியைத் தொடர இயலவில்லை. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அடக்குமுறையைப் பின்பற்றியதை எதிர்த்து பிறகு தனது பணியை ராஜினாமா செய்தார். (அவர் ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கியதால் கல்வித்துறை இயக்குநர் அவர் பணியில் இருந்து விலகியதை விரும்பவில்லை.) பிறகு அவர் சில ஆண்டுகள் சேலம் நகராட்சி கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். இதனுடன், தனியாக அப்போது சட்டமும் பயின்று வந்தார். பின்னர் பணியை ராஜினாமா செய்துவிட்டு 1881ம் ஆண்டில் சேலம் நகரத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் துவங்கினர். குறுகிய காலத்திலேயே அவர் மிகச் சிறந்த வழக்கறிஞராகப் புகழ்பெற்றார். 1882ம் ஆண்டு விஜயராகவாச்சாரியார் சேலம் மாநகர சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதே ஆண்டு, சேலம் செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் நடந்த இனக்கலவரத்தில் விஜயராகவாச்சாரியார் குற்றவாளியாகக் கருதப்பட்டு, 10 ஆண்டுகள் அந்தமான் தீவுகளுக்குக் கடத்தப்படவேண்டும் என்ற சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதனால் அவர் நகரமன்றப் பதவியையும் இழந்தார். சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விடுதலையானார். மேலும் மாகாண நிருவாகத்திடமிருந்து நட்ட ஈடும் பெற்றார். நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடியவர் எர்டுலே ஜான் நார்டன் என்ற ஆங்கிலேய வழக்கறிஞர். விஜயராகவாச்சாரியார் 1895ம் ஆண்டு முதல் 1901ம் ஆண்டு வரை மதராஸ் மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் மற்றும் 1913ம் ஆண்டு முதல் 1916ம் ஆண்டு வரை மத்திய கவுன்சில் உறுப்பினராகவும் பதவி வகித்து மக்களுக்காகப் போராடியவர். இந்தக் காலகட்டத்தில் ‘சில்வர் டங்’ என்று போற்றப்பட்ட வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி, சி.சங்கரன் நாயர், வி.பஷ்சியம் ஐயங்கார் போன்றோருடன் தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டார். 1906ம் ஆண்டு, கல்கத்தாவில் காங்கிரஸின் மகாசபை கூட்டம் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஜயராகவாச்சாரியார் “நிரந்தர நிலச் சீர்திருத்தம் மற்றும் நிலக்குடி உரிமை அமைப்பு முறைகள்” பற்றிய தீர்மானங்கள் கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தில் அவர் கூறியதாவது: ‘ஐரோப்பிய நிலப்பிரபுத்துவம் இந்தியாவில் திணிக்கப்படக்கூடாது, அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், இந்திய மக்களுக்கு அடிப்படையில் சொத்துரிமை உண்டு. அதை அவர்கள் மறுக்கமுடியாது.’ இந்தச் சீர்திருத்தங்கள் பின்னாட்களில் நிலச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் பல்வேறு சட்ட விதிகளை உருவாக்க முன் உதாரணமாக இருந்தது. 1919ம் ஆண்டு அமிர்தசரஸில் காங்கிரஸ் மகாசபை கூட்டம் மோதிலால் நேரு தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில், விஜயராகவாச்சாரியார் “மக்களின் அடிப்படை உரிமைகள்” என்பது குறித்துத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர் விஜயராகவாச்சாரி. மத்திய சட்டமன்றத்தில் லார்டு பிர்கென்ஹெட் (Lord Birkenhead, the Secretary of State for India) என்ற ஆங்கிலேய அதிகாரி, ‘இந்தியர்களால் ஒர் அரசியல் சாசனம் தயாரிக்க முடியுமா?’ என்று ஒரு சவால் விட்டார். அந்த சவாலை ஏற்று, 1927ம் ஆண்டு, இந்தியாவிற்கு முதன்முதலாக, தனி ஒரு மனிதனாக “ஸ்வராஜ் அரசியலமைப்புச் சட்டம்” என்ற ஒன்றைத் தயார் செய்து கொடுத்தவர் விஜயராகவாச்சாரியார். நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு விஜயராகவாச்சாரியார் எழுதிய அரசியல் சட்டம் ஓர் அடிப்படையாகவே அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் கொள்கை ரீதியாக ஆங்கிலேயே அரசை எதிர்த்து போராடும் அணுகுமுறையில் குழப்பம் உருவாகி தலைவர்களிடையே பனிப்போர் இருந்தது. அதில் மிதவாத காங்கிரஸ் அணிக்குத் தலைவர் கோபால கிருஷ்ண கோகலே. தீவிரவாத அணிக்குத் தலைவராகத் திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அப்போது விஜயராகவாச்சாரியார் திலகரின் அணியிலே இருந்தார். மெட்ராஸ் இதழில் பல்வேறு பொதுக்கொள்கைகள் பற்றி அவர் எழுதியவை ஏராளம். அறுபது ஆண்டுகள் போராடிய இந்தத் தேசியத் தலைவர், தேசிய வரலாற்றில் பல்வேறு பெருமைகளைப் பெற்றவர், இந்து மகா சபையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் (1931). கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நடத்திய சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக விஜயராகவாச்சாரியார் இருந்தார் என்பதை வெகு சிலரே அறிவர்! ஆசிரியர், சீர்திருத்தவாதி, அரசியல்வாதி, வழக்கறிஞர், சிறந்த அரசியலமைப்பு நிபுணர் எனப் பன்முகம் உடையவர் விஜயராகவாச்சாரியார். அவரின் மனைவியின் பெயர் லட்சுமி. அவர்களின் ஒரே மகள் சீதா. நாடு சுதந்திரம் அடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 19, 1944ம் ஆண்டு, விஜயராகவாச்சாரியார் தனது 92வது வயதில் காலமானார். இன்றைய அராஜக அரசியலில் ஆண்டுதோறும் அரசியல் தலைவர்களின் சிலைக்கு, பிறந்த நாளின் போதும் நினைவு நாளன்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ஆனால் நாட்டுக்காக உழைத்த தேசியத் தலைவரான விஜயராகவாச்சாரியாரை, தமிழகத்தின் பெருமை மிகுந்த மனிதரான இவரை, அரசும் அவர் உழைத்த கட்சியும் கைவிட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலில் விஜயராகவாச்சாரியார் போன்ற பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் மறைக்கப்பட்டு மக்கள் மனதில் இருந்து அடியோடு மறக்கப்படிக்கப்பட்டுவிட்டனர். சிறந்த தேசியவாதியாக விளங்கிய விஜயராகவாச்சாரியார் தனக்கென்று எதையுமே வைத்துக்கொள்ளவில்லை. ஏழை எளிய மக்களுக்கும் நாட்டுக்கும் தனது கடைசிகாலம் வரை உழைத்தார். சேலத்தில் அவர் பெயரில் ஒரு நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்தில் அவரின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவாக சேலம் மாநகரத்தில் இரண்டு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவைகள் ஏணிப்படி இல்லா சிலைகள்! அன்று முதல் இன்று வரை இந்தச் சிலையை யாரும் கண்டு கொள்வது இல்லை. நிலைமை இப்படி இருந்தால், அடுத்த தலைமுறைக்கு எப்படி இந்தத் தேசத்துக்காகத் தியாகம் செய்த மாபெரும் தலைவர்கள் பற்றித் தெரியவரும்? https://valamonline.in/2020/10/c-vijayagavachari.html#more-2412   Facebook Instagram X-twitter

தேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன் Read More »

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன் பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan July 29, 2020 Tamil Articles    இன்றைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கல்வித்துறையைக் கையாள அரசும் அதைச் சார்ந்த சிலரும் தவறான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால், மாணவர்களின் சுகாதாரத்தையும் அவர்களின் மனநிலையையும் இவர்கள் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை என்பது பலவகையில் அவர்களின் அணுகுமுறையில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கொடும் நோய்த்தொற்றுக் காலத்தில் கல்வி அரசியலாக்கப்படுவது நல்லதல்ல. கல்வி மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. எனவே அதை அறிவார்ந்த வகையில் முறைப்படுத்துவது அவசியம். இந்த தவறான அணுகுமுறைக்கு, கல்வி சார்ந்து அரசின் அதிகாரப் பகிர்ந்தளித்தல் இல்லாமலிருப்பதும் ஒரு காரணம். இதுபோன்ற பல்வேறு அசாதாரணமான சூழ்நிலையில் கடந்த காலத்தில் கல்வித்துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான அறிவுரையை வழங்கிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர் தமிழகக் கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் மறைந்த பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு அவர்கள். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேல் தமிழகக் கல்வித் துறைக்கும் இந்தியக் கல்வித்துறைக்கும் பெரும் பங்காற்றியவர். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேல், தரம் மிக்க பள்ளி மற்றும் உயர் கல்வியை அனைவருக்கும் வழங்கிட அயராது பாடுபட்டவர். பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு அவர்கள் தனது நூறாவது வயதில் மார்ச் 29, 2020 அன்று சென்னையில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த கல்வித்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக நீண்ட உரையாற்றக் கூடிய வல்லமை படைத்தவர் பேராசிரியர் சிட்டிபாபு. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதியவர். குறிப்பாக அவரின் ‘இந்தியாவில் உயர் கல்வி: இடர்ப்பாடுகளும் கட்டுப்பாடுகளும்’ மற்றும் ‘சிந்தனைச் சிகரங்கள்’ ஆகியவை வெகுவாக மதிக்கப்பட்ட புத்தகங்கள். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அமைப்பாக்கப்பட்ட, கல்வி தொடர்பான பல்வேறு குழுக்களின் தலைவராகவும், உறுப்பினராகவும் பணியாற்றி, காலத்திற்கேற்ப பல மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்தார். அவர் பரிந்துரைத்த பெரும்பாலான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன. 1983-85ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய ஆசிரியர் குழுவில் பேராசிரியர் சிட்டிபாபு உறுப்பினராக இருந்தார். இவர் தனது அறுபது ஆண்டுகால கல்விப் பணியில் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, பல கல்வி சார்ந்த கருத்தரங்குகளில் உரையாற்றி, கல்வியில் உள்ள ஆழ்ந்த நுணுக்கங்களை ஆராய்ந்து, அதையெல்லாம் நமது பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் புகுத்த தக்க ஆலோசனைகளை வழங்கி, அவற்றை உலகத் தரத்திற்கு செம்மைப்படுத்த அயராது பாடுபட்டார். காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். கல்வித்துறையில் பல முக்கிய பொறுப்புகள் வகித்து முத்திரை பதித்தவர் இவர். 1986ம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், பேராசிரியர் சிட்டிபாபுவின் சிறந்த கல்விப் பணியைப் பாராட்டி கௌரவ டாக்டர் (Honaris Causa) பட்டம் வழங்கப்பட்டது. 1986-87ம் ஆண்டில் இந்தியாவின் அகில இந்தியப் பல்கலைக்கழகத்தின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். பேராசிரியர் சிட்டிபாபு அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு முறையும் (1975-1978), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறையும் துணைவேந்தராக (1980-1986) பணியாற்றி, அவை தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களாக உயரப் பாடுபட்டவர். அதற்கு முன்பாக, வேலூர் அரசு தொழிற் கல்லூரியின் முதல் முதல்வராகவும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநராகவும், கல்லூரிக் கல்வித்துறையின் இயக்குநராகவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர். 1992ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் முதல் துணைத் தலைவராகவும், மாநிலத் திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் சிட்டிபாபு அவர்கள் நவம்பர் 7, 1920ம் ஆண்டு அன்று திரு சை.வேணுகோபால் மற்றும் திருமதி ரமாபாய் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ வரலாறு (ஹானர்ஸ்) மற்றும் எம்.ஏ. வரலாறு பயின்று, அதே கல்லூரியில் வரலாற்றுத் துறையில் 1942ம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மேலும் சென்னை மாநிலக் கல்லூரியில் 1947ம் ஆண்டு வரலாற்றுத் துறை பேராசிரியராகவும் சிறிது காலம் பணிபுரிந்தார். பிறகு தமிழக அரசின் நேரடிப் போட்டித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்து, பின்னர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மண்டலக் கல்வி அலுவலர், துணை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை போன்ற பணிகளில் சிறப்பாகப் பணியாற்றினார். பணியில் இருந்து விடுப்பு எடுத்து, 1951-1952ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பேராசிரியர் சிட்டிபாபு ஃபுல் பிரைட் ஸ்காலர் மூலம் அமெரிக்காவில் கல்வித்துறையில் பயிற்சி பெற்றவர். இவரது சீரிய ஆளுமையினாலும், சிறந்த நிர்வாகத் திறனாலும் சீர்திருத்தத்தாலும் மேலும் ஏற்றங்களைப் பெற்றது மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும். 1970களில் தென்தமிழகத்தில் உயர் கல்வியினை வழங்கி வந்த ஒற்றைப் பல்கலைக்கழகமாக மதுரை பல்கலைக்கழகம் திகழ்ந்தது. 1975ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிட்டிபாபு அவர்கள் துணைவேந்தராகப் பதவியேற்ற பிறகு, தமிழகத்தில் முதன்முறையாக திறந்தநிலை பல்கலைக்கழக முறை மூலம் அஞ்சல் வழிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். இந்த முறை இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று நாட்டிலே முன்னோடித் திட்டமாகத் திகழ்ந்தது. பல்வேறு காலச் சூழல்களில் பள்ளிப் படிப்பினை இடையில் கைவிட்டவர்களுக்கு, தங்களது பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்து பயில, இந்தத் திறந்தவெளி பல்கலைக்கழக முறை மிகப்பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்டது. இன்றளவும் இந்த முறை மாணவர்கள் உயர் கல்வி பெற்று முன்னேற பெரிய அளவில் உதவுகிறது. மேலும் 1980ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவியேற்ற பேராசிரியர் சிட்டிபாபு, திறந்தநிலைப் பல்கலைக்கழக முறையை இங்கும் அறிமுகப்படுத்தினார். இங்கும் அவர் பல்வேறு பிரச்சினைகளை லகுவாகக் கையாண்டு, உயர் கல்வியிலும் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரின் முயற்சியால் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்தாக்கவியல் துறை தொடங்கப்பட்டுப் பல முக்கியப் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டன. வரலாற்றுத்துறையில் மிகவும் ஆர்வமாக இருந்த பேராசிரியர் சிட்டிபாபு 1994ம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் தலைவராக பத்தாண்டு இருந்தார். டாக்டர் சி.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய டாக்டர் மு.வ. அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்புக்கு அணிந்துரை வழங்கியபேராசிரியர் சிட்டிபாபு  ‘வரலாறு மனித முன்னேற்றத்திற்குப் படிப்பினையாகும் தகுதி உடையது. அதிலும் ‘வாழ்க்கை வரலாறு’ முறைப்படி எழுதப்படுமானால், மனித இன வளர்ச்சிக்கு வழிகாட்டும் சிறப்பினைப் பெறும். கற்பனையில் முகிழ்க்கும் கதைகளைவிட, உண்மைகளில் மலரும் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக உதவி, மனிதனை நல்வழிப்படுத்தும் ஆற்றலுடையதாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே அனைத்து தரப்பட்ட மக் களுக்கும் தரமான பள்ளி மற்றும் உயர் கல்வியை உறுதி செய்வதில் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிட்டிபாபு. 1991ம் ஆண்டு தமிழக அரசு நர்சரி மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கும் தனியார்ப் பள்ளிகளை ஆராய்ந்து ஒழுங்குபடுத்தத் தேவையான பரிந்துரைகளை வழங்க ஒரு வல்லுநர் குழுவினை உருவாக்கியது. அதன் தலைவராக பேராசிரியர் சிட்டிபாபு நியமிக்கப்பட்டார். அவர் பரிந்துரைத்தவற்றை நெறிப்படுத்த 1993ம் ஆண்டு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் தனியார்ப் பள்ளியில் தீ விபத்தில் கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் இறந்தனர். அதன் பிறகு பேராசிரியர் சிட்டிபாபு அவர்களின் தலைமையில் அமைப்பிக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளின்படி, பள்ளிகளில் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேணடும் என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தனியார்ப் பள்ளிகள் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்தன. அவை நீதிமன்றம் வரை சென்றன. தமிழக முழுவதும் எண்ணற்ற பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மற்றும் பலவேறு பல்கலைக்கழகங்களுக்கும் சென்று கல்வியறிவை வளர்த்தவர் பேராசிரியர் சிட்டிபாபு. ஆரம்பக் கல்வி முறையில் தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது அவரது நீண்டகால பரிந்துரை. இந்தப் பரிந்துரைக்கு எந்த அரசும் செவி சாய்க்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்து செயல்பட தன்னாட்சி மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியவர் பேராசிரியர் சிட்டிபாபு. ஏனென்றால், கல்வி நிறுவனங்கள் முழு திறனுடன் செயல்பட மற்றும் நிதி மற்றும் இதர விஷயங்களில் சரியான முடிவுகள் எடுக்க தன்னாட்சி உதவும் என்று எண்ணினார் அவர். இது சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குக் கடிதமும் எழுதினார் அவை பல்கலைக்கழக மானியக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இடம்பெற்றன. பேராசிரியர் சிட்டிபாபு பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகக் குழு தலைவர், உறுப்பினர், ஆலோசகர் போன்ற ஏராளமான பொறுப்புகளை வகித்தவர். காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் அவர்களின் மிக நீண்டகால பக்தரும் கூட. காஞ்சி மகா சுவாமிகள் மறைவுக்குப் பிறகு பேராசிரியர் சிட்டிபாபு ‘காஞ்சி மகா முனிவர் – தெய்வீகத்தின் தொலைநோக்குப் பார்வை’ என்றொரு ஆங்கிலக் கட்டுரையை எழுதினார். அதில் பேராசிரியரின் நீண்டகால நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் ஆன்மிகக் கொள்கையில் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார். இம்மண்ணில் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்ந்த மூத்த கல்வியாளர் பேராசிரியர் சிட்டிபாபு, வள்ளுவர் சொன்னது போல் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற கூற்றுக்கு இணங்க, தமிழகம் என்றென்றும் அவரின் கல்விப்பணியைப் பின்பற்றி, தரம் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி பெற வழிவகை செய்து, தொடர்ந்து உயரும் என்று உறுதிகொள்வோம்.                             https://valamonline.in/2020/07/professor-sv-chittibabu-tribute.html#more-2271             Facebook Instagram X-twitter

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன் Read More »

கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன்

கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன் கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan July 5, 2020 Tamil Articles   கடந்த ஐந்து மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ், யானையின் காதில் சித்தெறும்பு புகுந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி இருக்கிறது. இந்த நிலையில்தான் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் இருக்கிறார்கள். எத்தனை கொடிய ஒரு நோயைக் காட்டிலும் இந்த கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்படுகிறோம். ஏனென்றால், இந்த வைரஸ் மனிதர்களிடையே ஒரு நொடியிலே பரவும் தன்மை உள்ளதால்தான்.   கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே (196-க்கும் மேல்), இந்த நோய்க்கு எதிராகத் தனிமைப்படுத்திக் கொள்ளும் போரை அறிவித்துப் போராடி வருகின்றன. இந்த கோவிட்-19 அச்சத்தை உண்டாக்கி உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையான 702.4 கோடிப் பேரையும் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதித்து இருக்கிறது. இந்த அதிநவீன அறிவியல் வளர்ச்சியில் இந்த நோயின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதில் கிட்டத்தட்ட இருபது சதவீதம் மக்கள் இந்தியாவில் உள்ளனர். இப்படிப்பட்ட உலகை உலுக்கிய அசாத்திய சூழுல் நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் நடந்திருக்கிறது. ஆம், 1918ம் ஆண்டு முதல் உலகப்போர் நடக்கும்போதே ஒரு கொடூரத் தொற்றுநோய் வைரஸ் பரவி உலகையே உலுக்கியது. இன்று சீனா நடந்துகொண்டது போல் அன்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை சில மாதங்களுக்குப் பத்திரிகைகளுக்கு எட்டாமல் செய்தியை முடக்கின. இந்தக் கொடிய தொற்றுநோய் பற்றி முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில்தான் பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டது. இது ‘ஸ்பானீஷ் ஃப்ளு’ என்று அழைக்கப்படுகிறது. பலரும் இதை ஸ்பெயினில் தோன்றியதாக தவறாக நினைத்துவிடுகின்றனர். இந்தத் தொற்றுநோயால் இன்றைய அமெரிக்க அதிபரின் தாத்தா இறந்துபோனாராம். அன்று எந்த ஒரு சர்வதேச சுகாதார அமைப்போ அல்லது பன்னாட்டுக் கூட்டமைப்போ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது, உலக முழுவதும் ‘ஸ்பானீஷ் ஃப்ளூ’ தொற்றுநோயால் உயிர் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பது மில்லியன் முதல் நூறு மில்லியன் வரை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். ஆனால் சித்தார்த் சந்திரா மற்றும் ஏவா காசென்ஸ் நூர் அவர்களின் 2014ம் ஆண்டு மேற்கொண்ட ‘இந்தியாவில் 1918ம் ஆண்டு படிப்படியான தொற்றுநோய் உலகளவில் பரவியது எப்படி மற்றும் இந்தியாவின் ஆதாரங்கள்’ என்ற ஆய்வின்படி இந்த வைரசால் உலகில் உயிர் இறந்தவர்கள் மொத்தம் இருபது முதல் ஐம்பது மில்லியன் வரை என்று தெரிவித்துள்ளார்கள். அன்றைக்கு இந்தியாவில் இருந்த ஒன்பது மாகாணங்களில் 213 மாவட்டங்கள் இருந்தன. ஐந்து ஆண்டுகள், 1916ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை மாகாணங்கள் மற்றும் மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்தியாவில் உயிர் இறந்தவர்கள் ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி வகித்த பகுதியில் மட்டும் 13.8 மில்லியன் மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். இந்தத் தொற்று நோய் இந்தியாவில் முதன்முதலில் பம்பாயில்தான் பரவியது, பிறகு மற்ற மாகாணமான கல்கத்தா, மதராஸ் போன்ற பகுதிகளில் பரவியது. மழைக்காலத்தில்தான் இந்த நோய் பரவியது. அந்தச் சமயத்தில் இரண்டாம் கட்டப் பரவலில்தான் இந்த தொற்று நோயால் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டது. சித்தார்த் சந்திரா மற்றும் ஏவா காசென்ஸ் நூர் அவர்களின் ஆய்வு முடிவுகள்: முதல்முதலில் எல்லோரையும் தாக்குகின்ற தொற்று நோய், எங்கு பரவும் என்று அறிகுறி தெரிகிறதோ, அங்கு, குறுகிய காலத்தில் அதைக் கையாளப் போதிய போர்க்கால அடிப்படை மருத்துவ மேலாண்மை வேண்டும். அப்போதுதான் அதற்குப் பிறகு மற்ற பகுதிகளில் பரவும்போது மேலும் விழிப்புணர்வோடு அதை எதிர்கொண்டு கட்டுப்படுத்தலாம். ஆனால் சீனா இன்று அதைச் செய்யத் தவறிவிட்டது. அதைவிட உலக நாடுகளின் கூட்டமைப்பில் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பு ஆரம்பக் கட்டத்திலேயே முன்னெச்சரிக்கையாக இந்த கொரோனா தொற்றுநோயைக் கையாள முடியாமல் தவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் படிப்படியாக எப்படிப் பரவியது, அதை எப்படி உலகச் சுகாதார அமைப்பும் மற்றும் சீன அரசும் கட்டுப்படுத்தாமல் தவித்துக் கை கழுவின என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கொரோனா வைரஸ் பற்றி சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன்முதலாகத் தெரியவந்து உள்ளது. டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் வூகான் பகுதியில் உள்ள மருத்துவர்கள், மனிதர்களிடையே கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கண்டுபிடித்துள்ளனர். பிறகு அங்குள்ள மருத்துவர்களையும் இந்த நோய் தாக்கியது. அந்த மாகாணத்தில் டிசம்பர் இறுதியில் இந்த கொரோனா வைரஸ் பரவுவதை மருத்துவர் லி வென்லியாங்கின் கண்டுபிடித்து மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 31 அன்று வூஹான் நகராட்சி சுகாதார ஆணையம் ஆய்வு செய்து ‘அப்படி எந்த ஒரு தொற்றுநோய் பரவும் அறிகுறியும் இல்லை’ என்று அறிக்கை அளித்தது. மேலும் அதே நாள் ஹூபேய் மாகாண சுகாதார ஆணையம் ஆய்வு செய்து,  ‘கொரோனா தொற்றுநோய் சம்பந்தமாக எந்தவிதமான இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளக்கூடாது’ என்று தடை விதித்து அறிக்கை வெளியிட்டது. ஜனவரி 8 மற்றும் 11ம் தேதி வரை சீன அரசு கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவும் தொற்றுநோய் இல்லை என்றே சொல்லி வந்தது. ஜனவரி 15ம் தேதி வூகான் மாகாண சுகாதார ஆணையம் மேலும் ஒரு முறை ஆய்வு நடத்தி குறைந்தபட்ச அளவுக்குக் கூட இந்த கொரோனா வைரஸ் மக்களிடையே தொற்றுநோயாகப் பரவ வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. மேலும் ஜனவரி 19ம் தேதி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கொரோனா வைரஸை முன்னெச்சரிக்கையாகத் தடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் முடியும் என்று அறிக்கை வெளியிட்டது. இதற்கு அடுத்த நாள் சீனாவின் மற்ற மாகாணத்திலும் கொரோனா வைரஸ் பரவுவது பற்றி சீனா அறிந்து கொண்டது. ஆனாலும் தான் சொன்னதைச் சாதித்தது. ஜனவரி, 2020 முதல் வாரத்தில் கண் மருத்துவரான லீ வென்லியாங் மீது ‘பொய்யான வதந்திகளை’ பரப்பியதற்காக சீன அரசு வழக்கு தொடுத்துக் காவலில் வைத்தது. அவர் அரசு கூறியபடி மன்னிப்புக் கடிதம் கொடுத்த பிறகே வெளியே வந்தார். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட அவர் கடந்த பிப்ரவரி 7ம் தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தார். அவர் இறந்தபிறகு சீன அரசு அவர் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வூகானில் இருந்து வந்த பெண்மணி மூலம் பரவத்தொடங்கியது. அந்த 61 வயதுகொண்ட பெண்மணி வூகானில் உள்ள பல சிறு சந்தைகளுக்குச் சென்றுவந்ததாக தாய்லாந்து அரசு தகவல் தெரிவித்தது. ஜனவரி 15ம் தேதி ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. ஜனவரி 21ம் தேதி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. ஜனவரி 30ம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியது கண்டறியப்பட்டது. இப்படிப் பல நாடுகளில் நோய் பரவியது. இதை எல்லாம் உலகச் சுகாதார அமைப்பு எப்படி எடுத்துக்கொண்டது என்பது ஒரு புரியாத புதிர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இப்படிபட்ட உயிரைக் கொல்லும் தொற்றுநோய் பரவுதல் பற்றி டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தனது ஆய்வைத் தொடங்கிய உலகச் சுகாதார அமைப்பு ஜனவரி 14ம் தேதி ஓர் ஆரம்பகட்ட அறிக்கையை வெளியிட்டது. அது என்னவென்றால் மனிதர்களிடையே பரவும் அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புப் பற்றி எந்த ஒரு திட்டவட்டமான தெளிவான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்பதுதான். ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு ஜனவரி 22ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தூதுவர் குழு வூகான் மாகாணத்தில் கள ஆய்வு செய்து ‘மனிதர்களிடையே கொரோனா வைரஸ் பரவுகிறது’ என்று சொல்லி, புதிய பரிசோதனைக்கான அறிவுரையைக் கூறித் தொற்று நோய் பரவுவதை உறுதி படுத்தியது. அப்போது கூட பிற நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையாக என்னென்ன வழிமுறைகளைக் கையாளவேண்டும் என்பதைப் பற்றி ஆக்கபூர்வமாகத் தெரிவித்ததா என்பது சந்தேகமே. அதனால்தான் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடித்தது ஆரம்பத்தில். இதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. இன்று உலகமே தத்தளித்து நிற்கிறது. உலக சுகாதார அமைப்பில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் இந்த அமைப்பு மற்றும் உலக நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் நிர்வாக முறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகளின் செயல்களில் மேற்கத்திய வளர்ந்த நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் காலனி ஆதிக்க மனநிலையில்தான் இப்போதும் செயல்படுகின்றன. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியை, வளர்ந்த நாடுகளின் சந்தைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றன. சர்வசேத அளவில் அனைத்து நிலையிலும் அதிகாரப் பங்களிப்பில் தகுந்த அளவில் வாய்ப்பளிப்பதில்லை. இந்தியா போன்ற நாடுகளுக்குப் பன்னாட்டுக் கூட்டமைப்பான ஐ.நா மற்றும் அதன் கிளை நிறுவனங்களின் நிர்வாகத்தில், தகுந்த நிர்வாகப் பொறுப்பில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்பது நிதர்சன உண்மை. ஆராய்ச்சியாளர்களிடையே சீன அரசு, உலக சுகாதார அமைப்புக்குத் தன் உலக வர்த்தக செல்வாக்கைக் கொண்டு அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்துத்தான், அதாவது மார்ச் 11ம் தேதிதான், ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை, ஒரு பாண்டமிக் என்று சொல்லப்படும் எல்லோரையும் தாக்குகின்ற உலகம் முழுக்கப் பரவும் நோய் என்று அறிவித்தார்கள். ஜனவரி மாதம் முதல் மார்ச் 2020 வரை இந்தியாவில் இருந்து சர்வசேத விமானப் பயணம் செய்தொர் எண்ணிக்கை பல மில்லியன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தத் தொற்று நோய் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று அச்சம் வலுக்கிறது. இன்று உலகெங்கிலுமான பிராந்தியங்களிலும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் கொரோனா

கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன் Read More »

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan June 10, 2020 Tamil Articles வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில், குறிப்பாகக் கடந்த இருபது ஆண்டுகளில்தான் உலகில் அதிகமான நாடுகள் தங்களை ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ளன. இப்போது உலகில் பாதிக்கும் அதிகமான மக்கள் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழுகின்றார்கள். இந்த மாற்றம் ஏனென்றால் பெருவாரியான மக்கள் ஜனநாயக முறையில் தங்களுக்கான ஒரு அரசை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.  அந்த நம்பிக்கையை அதே மக்கள் நிலை நாட்டுகிறார்களா? ஜனநாயகத்தில் அனைவருக்கும் சமமான மேம்பாட்டை அடைய முடியும் என்பது ஒரு சவாலான ஒன்றுதான் என்பதை முதிர்ச்சி அடைந்த சில ஜனநாயக நாடான பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மற்ற முறைகளை விட ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் ஏற்றத்தாழ்வு இல்லாத சமமான மேம்பாட்டை அனைவரும் அடைய முடியும் என்பதுதான் கடந்த நூற்றாண்டில் மாபெரும் புரட்சியாக இருந்தது. ஏனென்றால் ஜனநாயக முறையில் நம்மில் சிலர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையைப் பின்பற்றி மக்களை வழி நடத்த அதாவது ஜனநாயகக் கடமையாற்ற பிரதிநிதிகளாக வருகின்றனர். மேலும் ஜனநாயக அரசு முறை மூலம் இன்னும் பலர் ஜனநாயகக் கடமையாற்ற வருகின்றனர். இவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது அரசுக் கட்டமைப்பின் முக்கியச் செயலாக்கத்திற்குத் தூண்களாக, மக்களுக்காகப் பணியாற்றுபவர்கள்.  ஆனால் இந்த இரண்டு குழுக்கள் (மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள்) நடைமுறையில் ஜனநாயகத்தின் கடைமையை முழுமையாகச் செவ்வனே செய்கின்றனவா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான். இது இந்தியாவுக்கும் பொருந்தும். மக்கள் தங்களுக்காக இயற்றிய அரசியல் சாசனம் பிற்காலத்தில் அவர்களுக்கு எதிராகவே செயல்படத் துவங்கியதுதான் நாம் கூர்ந்து நோக்கவேண்டிய ஒன்று. நம் நாட்டின் அரசியல் சாசனமுறையின் அடிப்படைக் கொள்கைகள் என்னவென்றால் அரசு தனது மக்களுக்காகச் செய்யும் அனைத்துச் செயல்பாடுகளின் தகவல்களை, முக்கியப் பாதுகாப்பு சம்பந்தமான சிலவற்றைத் தவிர, வெளிப்படையாக அளிக்க வேண்டும் என்பதுதான். இது மக்களின் அடிப்படைத் தார்மிக உரிமை. அப்படி குறைந்தபட்ச தகவல் கூடத் தெரிவிக்கப்படவில்லை என்றால் அந்த அரசு தனது மக்களுக்கு அளித்த குறைந்தபட்ச ஜனநாயக கடமையைக் கூடச் செய்யவில்லை என்றுதான் பொருள். ஆனால் நடைமுறையில் அந்த ஜனநாயகக் கடமையாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டு சென்ற பலர் அதை  மறந்து விடுகின்றனர். இது அதிகார மற்றும் ஜனநாயக துஷ்பிரயோகம்.  இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நடக்கும் செயல்களைத் தடுத்து முறையாக நெறிப்படுத்தவே நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று ஜனநாயகத்திற்கு முக்கிய தூண்களாக இருக்கும் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கிடையே வழக்குகள் போட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்! இதுவே ஜனநாயகத்தின் முதல் முரண்பாடு. இவர்களின் நடைமுறைச் சிக்கலுக்கு மக்கள்தான் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.  இன்று நாட்டின் அடிப்படை மூலக்கூறுகளில் நிலம், மனிதவளம், மூலதனம் என்பதோடு, சரியாக சேகரிக்கப்பட்ட தகவலும் ஒரு முக்கிய மூலக்கூறாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்தத் தகவல் மூலக்கூறுதான் மற்றவற்றுக்கு முதன்மையாக விளங்குகிறது. ஆகவே தகவல் பரிமாற்றத்தை இனிமேலும் அரசு மற்றும் அதிகார வர்க்கத்தினரால் புறம்தள்ள முடியாது. நிலம், மனிதவளம் மற்றும் மூலதனம் பற்றி சரியான தகவல்கள் அரசு மற்றும் மக்களிடையே ஒருசேர இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சித் திட்டத்தின் முடிவுகளை ஜனநாயக முறைப்படி எடுக்க முடியும். ஒரு சில மாநில அரசுகள் ஏற்கெனவே தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றியிருந்தாலும் 2005ல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், அரசு அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்களிடமிருந்து மக்கள் தங்களது விண்ணப்பம் மூலம் தகவலைப் பெற முடியும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்து இன்று 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சில அடிப்படைத் தகவலைக் கூட சாதாரணமாக மக்கள் இன்றும் பெற முடிவதில்லை. அப்படி என்றால் இந்தச் சட்டத்தில் எதோ குறை இருக்கிறது; அல்லது நாம் பின்பற்றும் ஜனநாயக முறையில் மக்களுடன் இணைந்து செயல்படுவதில் அரசுகளுக்கு சிக்கல் இருக்கிறது; அல்லது அரசுகள் ஒளிவு மறைவற்ற நிலை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காக எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை; அல்லது அரசின் கொள்கைகளில் தெளிவு இல்லை மற்றும் ஒரு நிலையான முறையைச் செயல்படுத்த விரும்பவில்லை என்பதுதான் உண்மை. மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு அரசுக்கு வரியைச் செலுத்திவிட்டால் தங்களது கடமை முடிந்தது என்றுதான் இன்றும் எண்ணுகிறார்கள் பெருவாரியான பொதுமக்கள். இந்த நிலை எப்போது மாறுகிறதோ அன்றுதான் உண்மையான ஜனநாயக ஆட்சி முறை துவங்கும். இப்போது மற்றோரு கேள்வி எழுப்பப்படுகிறது. மக்கள் விண்ணப்பம் அளிக்காமல் ஏன் அரசு தாமாகவே முன்வந்து குறைந்தபட்ச தகவலைத் தெரிவிக்கக்கூடாது?  2005ல் தகவல் பெறும் உரிமை மசோதா பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டபோது மாற்றுச் சிந்தனையாளர்களும் அமைப்புகளும் சில அவசியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். அதாவது இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 4வது பிரிவின்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒவ்வொரு திட்டம் குறித்தும் தகவல்களைத் தாமாகவே முன்வந்து (suo moto) தொடர்ந்து வெளியிட வேண்டும் (Duty to Publish Act- DTP) என்று. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாற்றுக் கருத்துக்கள் அன்று பரவலாக விவாதிக்கப்படவில்லை. மேலும் 2005ல் மாற்றுச் சிந்தனையாளர்கள் அமைப்புகள் தெரிவித்தது என்னவென்றால், 4வது பிரிவை விரிவாக ஒரு சட்டமாக கொண்டுவந்தால் அரசுகள் மக்களுக்குத் தகவல்களை அளிக்கச் சுலபமாக இருக்கும். அதாவது அரசுகள் எப்படி ஒவ்வொரு தனிமனிதனிடம் வரியை வசூலிக்கின்றனவோ அதுபோலவே அரசுகள் மக்களுக்குத் தங்கள் செயல்பாடுகளைக் குறைந்தபட்சமாகத் தானாகவே முன்வந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முறையில், குறைந்தபட்ச தகவலுக்காக மக்கள் விண்ணப்பம் அளித்து தகவல் பெறுவது என்பதைவிட, தாமாகவே அரசு தகவல்களை வெளியிடுவது மேலான ஜனநாயக முறையாகவே இருக்கும். இன்றைய அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் உடனுக்குடன் தகவல்களைப் பொது மக்களுக்கு எளிதில் தெரிவிக்க முடியும். இப்படி ஒரு அரசு நினைக்குமானால் அது முதலில் செய்ய வேண்டியது, இதுவரை அரசியல் சாசனத்தில் திருத்தங்களால் கொண்டுவந்திருக்கும் அதிகாரப் பகிர்ந்தளித்தலை அனைத்து நிலைகளிலும் முறைப்படுத்துவதுதான்.  ஜனநாயக வெற்றியாளர்களால் தற்போது இருக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டால்தான் அரசுகள் தாமாகவே முன் வந்து தகவல்களை அளிக்க முடியும். 2005ல் இயற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள 4வது பிரிவை மேலும் விரிவாகத் திருத்தும் செய்து அரசின் அடிப்படைச் செயல் முறையில் ஒரு அங்கமாக இருக்கும்படி மாற்றம் கொண்டு வர வேண்டும்.  தற்போது உள்ள நடைமுறையைவிட அரசுகள் தாமாக முன்வந்து தகவல்களைப் பொது மக்களுக்கு அளிக்க ஆகும் செலவு ஒப்பீட்டளவில் குறைவே. வரியைச் செலுத்தும் மக்கள் தங்களுக்குத் தேவையான தகவலுக்கு விண்ணப்பம் அளித்து பணமும் செலுத்தித் தகவலைப் பெறுவது என்பதைவிட, பொதுவான மக்களுக்குத் தேவையான தகவல்களை அரசே தாமாக முன்வந்து வெளியிடுவதே மேம்பட்ட ஜனநாயகத் தன்மையாக இருக்கமுடியும். இப்படித் தகவல்களை வெளியிடுவது அரசுகளின் ஜனநாயகக் கடமை என்பதோடு, சரியான தார்மிகமான செயல்பாடாகவும் இருக்கும். https://valamonline.in/2020/06/right-to-information-act-section-4.html#more-1975 Facebook Instagram X-twitter

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன் Read More »

அமைதி வழியில் அரசியல் புரிந்த மாமேதை பி.எஸ்.சிவசாமி அய்யர் (1864-1946) | பா.சந்திரசேகரன்

அமைதி வழியில் அரசியல் புரிந்த மாமேதை பி.எஸ்.சிவசாமி அய்யர் (1864-1946) | பா.சந்திரசேகரன் அமைதி வழியில் அரசியல் புரிந்த மாமேதை பி.எஸ்.சிவசாமி அய்யர் (1864-1946) | பா.சந்திரசேகரன் Chandrasekaran Balakrishnan April 27, 2020 Tamil Articles முத்திரை பதித்த பல அரசியல்தலைவர்களை இந்திய சுதந்திரப் போராட்டம் உருவாக்கியது. அவர்களுக்கு உந்துகோலாக இருந்ததுமுழு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தேசப்பற்றுதான். இந்தியர் என்கிற ஒற்றுமைதான்.அன்றி, எந்த ஒரு இனமோ, மதமோ, சாதியோ அல்ல. சுதந்திரப் போராட்ட அரசியல் தலைவர்கள் சிலர்ஆங்கிலேய அரசை எதிர்த்து நேரடியாகக் கிளர்ச்சி செய்து பல்வேறு மாற்று முயற்சிகளைச்செய்து வந்தார்கள். அதே சமயம் சில அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசின் ஆதிக்க ஆட்சிமுறையை மாற்ற அரசின் பணிகளை ஏற்று உள்ளிருந்துபல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். இந்த இரண்டாவது ரக அரசியல்தலைவர்கள் அப்பொழுது மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அரசுக்கு எதிராகக்குரல் கொடுப்பவர்கள், ஆனால் நேரடியாகப் போராட்டத்தின் மூலம் செயல்பட விரும்பாதவர்கள்.இவர்கள் கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசியல் சாசன முறையில் சுதந்திரம் பெறவேண்டும்என்று எண்ணினார்கள். இவர்கள் ஆங்கிலேய அரசின் கொடுங்கோல் ஆட்சியை எழுத்துப்பூர்வமாகஎதிர்க்க வேண்டும்; எவ்விதத்திலும் வன்முறையோ உயிர்ச் சேதமோ ஏற்படாமல் போராட வேண்டும்என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேய அரசுக்கு எதிராக நேரடியாகக் கிளர்ச்சி மற்றும்போராட்டத்தின் மூலம் முத்திரை பதித்த அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறையாத வகையில்பல மிதவாத அரசியல் தலைவர்கள் அரசியல் சாசனம் மூலமாக ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்துள்ளதைவரலாற்று ஆய்வில் நாம் காணமுடிகிறது. அப்படிப்பட்ட சில தலைவர்கள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில்கொடிகட்டிப் பறந்துள்ளார்கள். அந்த வகையில் பழமானேரிசுந்தரம் சிவசாமி அய்யர் முற்போக்கான கொள்கைகளை ஆதரித்த ஒரு முக்கியத் தலைவர். பெரும்பாலும்அவர் பி.எஸ்.சிவசாமி அய்யர் என்று அழைக்கப்பட்டார். மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர்காலத்துக்கு முன்னர் மிதவாத காங்கிரஸ் வாதியாகவும், நல்ல தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர்சிவசாமி அய்யர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு சிவசாமி அய்யர் ஆற்றிய பங்களிப்புஆக்கபூர்வமானது. அவர் பொதுவாழ்வில் ஆற்றிய மகத்தான பணிகள் எண்ணற்றவை. அன்றைய இந்தியாவின்புகழ்பெற்ற சட்ட அறிஞராக அவர் விளங்கினார். கல்வித் துறையிலும் இந்தியப் பாதுகாப்புத்துறையிலும் பல்வேறு தளத்தில் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். ஒரு ஸ்டேட்ஸ்மென் என்றுஅனைவராலும் பாராட்டப்பட்டவர் அவர். சிவசாமி அய்யர் மகாத்மாகாந்தி பிறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்றைய தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமானேரி கிராமத்தில் பிப்ரவரி 7ம் தேதி 1864ல் மூத்தமகனாகப் பிறந்தார். அவருக்கு மூன்று இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். சிவசாமிஅய்யர் தனது ஆரம்பக் கல்வியை எஸ்.பி.ஜி கோட்டை பள்ளியிலும் உயர்நிலை பள்ளிக் கல்வியைமானம்புசாவடி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று 1877ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், மெட்ராஸ்மாநிலக் கல்லூரியிலும் இளங்கலைக் கல்வியை 1882ல் முடித்தார். பிறகு அவர் மெட்ராஸ்மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்ட அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று1885ல் வழக்குரைஞராக 21 வயதிலே தனது வக்கீல் பணியைத் துவங்கினார். முதலில் அவர் வழக்கறிஞர்ஆர்.பாலாஜி ராவ் என்பவரிடம் தொழில் பழகுநராகச் சேர்ந்து பயிற்சி பெற்றார். 1893ல் தனதுதந்தை இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதே வருடம் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில்உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து 1899ம் ஆண்டு வரை பணியாற்றினார். பிரிட்டிஷ்இந்தியாவின் ‘வெள்ளி நாக்கு’ (சில்வர் டங்) என்று போற்றப்படும் வி.எஸ்.ஸ்ரீனிவாசசாஸ்திரி, சிவசாமி அய்யரிடம் சட்டம் பயின்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குரைஞராக சிவசாமிஅய்யர் மெட்ராஸ் மாகாண உயர் நீதிமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் 1883 முதல்1907 வரை மெட்ராஸ் சட்டச் செய்தி இதழின் (Madras Legal Journal) இணை ஆசிரியராக இருந்தார்.அவர் 43து வயதில் 1907 முதல் 1912 வரை மெட்ராஸ் மாகாண தலைமை வழக்கறிஞர் அதாவது அட்வகேட்ஜெனரலாகப் பணியாற்றினார். மெட்ராஸ் உயர் நீதிமன்றவழக்கறிஞர்களுக்கான சங்கத்தை சிவசாமி அய்யர் 1889ம் ஆண்டு உருவாக்கினார். பல முக்கியபுகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்றோர் சட்ட நுணுக்கங்களில்சிவசாமி அய்யரிடம் ஆலோசனை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்துறையில் சிறந்துவிளங்கிய அவர் 1904 முதல் 1907 வரை மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.சி)தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு கவர்னர் நிர்வாக கவுன்சில் உறுப்பினராக 1912 முதல்1917 வரை பதவி வகித்தார். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இந்தியத் தொண்டர் இயக்கத்தைஉருவாக்கி ஆதரவளித்தார் சிவசாமி அய்யர். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் கொள்கையான,படிப்படியாக அரசியல் சாசனச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் திட்டத்தை ஆதரித்த இந்தியமிதவாதிகள் கட்சியின் தலைவராக 1919ல் மற்றும் 1926ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.நாசபைக்கு முன்பு இருந்த ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’1922ம் ஆண்டு நடத்திய மூன்றாவது கூட்டத்தொடரில் இந்தியாவின் சார்பாக சிவசாமி அய்யர்கலந்துகொண்டு, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின்செனட் உறுப்பினராக 1898ல் சிவசாமி அய்யர் முதல் இந்தியராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டுபல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும் (Fellow) இருந்தார். அவர் 1916 முதல் 1918 வரை மெட்ராஸ்பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பிறகு 1918 முதல் 1919 வரை வாரணாசியில் உள்ள பனாரஸ்இந்துப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். வி.கிருஷ்ணசாமி அய்யர்சென்னையில் சமஸ்கிருதக் கல்லூரியைத் துவங்கினார். அந்தக் கல்லூரியின் தலைவராக முப்பதுஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் சிவசாமி அய்யர். பள்ளியிலும் மற்றும் கல்லூரியிலும்மாணவர்களுக்குத் தாய் மொழியில்தான் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் ஆழமாகத்தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சாற்றல் மூலம் எடுத்துரைத்தார் சிவசாமி அய்யர். சட்டம்,சமூகம், அரசியல், பொருளாதாரம், இராணுவம், பன்னாட்டுச் சட்டம் போன்றவை பற்றிப் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார் அவர். அவருடைய சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில்இருந்த சிறிய பள்ளி ஒன்று கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போது, 1906ம் ஆண்டு அந்தப்பள்ளியை முழுவதுமாகத் தன் சொந்த நிதியின் மூலம் உயர்த்தினார். அந்தப் பள்ளி இன்றும்சர்.பி.எஸ்.சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அவர்இருக்கும் வரை அவருடைய பெயரை அந்தப் பள்ளிக்கு வைக்க அவர் அனுமதிக்கவில்லை. அன்றைக்குஇந்தப் பள்ளிதான் சுத்தியிருக்கும் ‘பதினெட்டு’பட்டிக்கும் ஒரே பள்ளியாகத் திகழ்ந்தது. பெண்கள் படிக்க வேண்டும்என்பதைத் தீவிரமாக வலியுறுத்தியவர் சிவசாமி அய்யர். இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ளலேடி சிவசாமி அய்யர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அப்பொழுது தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளிஎன்று 1930ல் இயங்கிவந்தது. இந்தப் பள்ளியின் வளர்ச்சி குன்றியபோது, சிவசாமி அய்யர்தலைமையேற்றுப் பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்து, அந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகஉயர்த்தினார். அவர் உயிரோடு இருக்கும் வரை அவரது மனைவியின் பெயரை அந்தப் பள்ளிக்குவைக்க மறுத்துவிட்டார். இந்த இரண்டு பள்ளிகளிலும்அவர் நூலகத்துக்கு என்று தனிக் கவனம் செலுத்தினார். மிகச்சிறந்த பழமையான மற்றும் புதியநூல்களையெல்லாம் திரட்டி மாணவ மாணவிகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதில் ஆர்வமுடன்செயல்பட்டார். இந்த இரண்டு பள்ளிகளும் இன்று வரை சிறப்பான கல்விக் கூடங்களாக விளங்குகின்றன.1939ம் ஆண்டு அவரது மனைவி இறந்த பிறகு, தான் வசித்த மைலாப்பூர் வீட்டை விற்று, அந்தப்பணத்தைப் பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார் சிவசாமிஅய்யர். சென்னை விவேகானந்தா கல்லூரிக்கும் மற்றும் சம்ஸ்கிருத கல்லூரிக்கும் அவர் அளித்தநன்கொடைகள் பற்றி அவர் இறந்த பிறகுதான் பலருக்கும் தெரியவந்தது. சிவசாமி அய்யர் 1931ல்இந்திய ராணுவ கல்லூரிகளுக்கான குழுவில் உறுப்பினராக இருந்தார். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ்கவுன்சில் உறுப்பினராக 6 ஆண்டுகள் (1921-1923 மற்றும் 1924-1926) இருந்தபோது 1921ல்சிவசாமி அய்யர் பதினைந்து அம்சங்களைக் கொண்ட அத்தீர்மானத்தில், இந்தியக் கடல் வணிகத்தைமேம்படுத்தி, கப்பல் பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் பணியிடங்களில் 25 சதவீதம் இந்தியருக்குவாய்ப்பளிக்க வேண்டும் குரல் எழுப்பினார். இன்றைய இந்தியக் கடல்சார் படிப்புகளுக்குஅவர் அன்று கொண்டு வந்த தீர்மானமே மூல வித்தாக அமைந்தது. மேலும் 1912ல் கோகலே அவர்கள்உறுப்பினராக இருந்த அன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இந்தியர்களுக்கு அனைத்துத்துறைகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்திய ராணுவத்தைப் பற்றிமிகுந்த அக்கறையோடு பல கேள்விகளை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் பதிய வைத்தவர்சிவசாமி அய்யர். மேலும் இந்தியாவில் புதிய கல்வி நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும்என வலியுறுத்தினார்.தமிழ் – ஆங்கிலப் பேரகராதி(Tamil Lexicon) தொகுக்கும் பணியை முன்னெடுத்த குழுவின் தலைவராக விளங்கியவர் சிவசாமிஅய்யர். அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள்: உ.வே. சாமிநாத அய்யர், எஸ்.அனவரதவிநாயகம்பிள்ளை, எஸ்.குப்புசாமி அய்யர், ரி.ராமகிருஷ்ண பிள்ளை மற்றும் மார்க் ஹன்டர். சிவசாமி அய்யர் காந்திமேல்மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் அவர் அறிவித்த போராட்டங்களில் நடந்தவன்முறையைக் கண்டு கடுமையாக விமர்சித்தார். மேலும், நேரு சோவியத் நாடுகள் பின்பற்றியகொள்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதையும் எதிர்த்தார். சிவசாமி அய்யர் அரசியலில்மிதவாதியாக இருந்ததோடு, மக்கள் சமூக நலனிலும் அக்கறை கொண்டிருந்தார். தனிநபர் சுதந்திரத்தில்சாதி வேற்றுமை கூடாதென்று கடுமையாக 1933ல் வாதாடியிருக்கிறார். ஆட்சி முறையைக் கட்டாயமாகப்பரவலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசியல் சாசனத்தில் அடித்தட்டு மக்களுக்குத்தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றால் எந்த ஆட்சியானாலும் அது அநீதியும் கொடுங்கோன்மையும்கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கும் என்று அழுத்தமாக 1913ல் கூறினார் சிவசாமி அய்யர். சிவசாமி அய்யர் சிறந்தநூல்களையும் எழுதியுள்ளார். ‘எவல்யூஷன் ஆஃப் இந்துமாரல் ஐடியல்ஸ்’ (1935) என்ற தலைப்பில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்நிகழ்த்திய கமலா நினைவுச் சொற்பொழிவு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ‘இந்தியஅரசியல் சாசன பிரச்சினைகள்’ (1928) என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய வி.கிருஷ்ணசாமிநினைவுச் சொற்பொழிவுகள் போன்றவை பிரபலமானவை.நாடு சுதந்திரம் அடையபத்து மாதங்களுக்கு முன்பு அவர் தனது 82ம் வயதில் 1946 நவம்பர் 5ம் தேதி காலமானார்.அவருடைய தள்ளாத வயதிலும், இந்தியா மத அடிப்படையில் பிளவுபட இருப்பதை அறிந்து வேதனையுற்றுஇந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்துக் கடைசி மூச்சுவரை குரல் கொடுத்தார் சிவசாமி அய்யர். Facebook Instagram X-twitter

அமைதி வழியில் அரசியல் புரிந்த மாமேதை பி.எஸ்.சிவசாமி அய்யர் (1864-1946) | பா.சந்திரசேகரன் Read More »

நானி பல்கிவாலா: நீதித் துறை அறிஞரின் பொருளியல் முகம்

நானி பல்கிவாலா: நீதித் துறை அறிஞரின் பொருளியல் முகம் நானி பல்கிவாலா: நீதித் துறை அறிஞரின் பொருளியல் முகம் Chandrasekaran Balakrishnan December 12, 2024 Tamil Articles   பா.சந்திரசேகரன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பன்முக ஆளுமைகளில் ஒருவர், நானி பல்கிவாலா. நீதித் துறை அறிஞராக அவரது அபார ஆளுமைத்திறனைப் பற்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்றளவும் பேசப்பட்டுவருகிறது. பிரபல வழக்கறிஞர், இந்திய அரசமைப்புச் சட்ட நிபுணர், சர்வதேச சட்ட வல்லுநர், சிறந்த சட்டப் பேராசிரியர், கல்வியாளர் என்பதோடு அவர் ஒரு பொருளியல் அறிஞரும் நிதிநிலை ஆய்வாளரும்கூட. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பின்பற்றுவதோடு, அவற்றை அரசியல் களத்தில் கண்ணியமாகக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது என்பதுதான் வரலாறு. அந்நிலை இன்றும் தொடர்கிறது. அரசமைப்புச் சட்டம் குறித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்குகளில் நானி பல்கிவாலாவின் பங்களிப்பு அளப்பரியது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை ஆளும் அரசு, தன்னுடைய மனம்போன போக்கில் மாற்றங்கள் செய்ய முடியாத அளவுக்கு அவற்றை வழக்குகளின் வாயிலாக வலுப்படுத்தினார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது, வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளில் அவரின் அறிவார்ந்த வாதங்கள் பாராட்டப்பட்டன. அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் குறித்த அவரது விமர்சனங்கள் வீரியம் மிக்கவை. வரிச் சட்டங்களில் நிபுணர் நானி ஆர்த்தீர்ஸ் பல்கிவாலா, ஜனவரி 16, 1920-ல் பம்பாயில் ஓர் எளிய பார்சி குடும்பத்தில் பிறந்தார். அவரின் பெற்றோர் ‘நானாபாய்’ என்று அவரை அழைத்தார்கள். மற்றவர்கள் அவரை ‘நானி பல்கிவாலா’ என்று அழைத்தார்கள். அவர் தனது பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை பம்பாயில் முடித்தார். தூய சேவியர் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியமும் பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். பள்ளியில் படிக்கும்போது, திக்குவாய் பிரச்சினையைச் சந்தித்த அவர், பின்னாளில் மிகப் பிரபலமான வழக்கறிஞராக விளங்கினார் என்பது ஊக்கமூட்டும் விஷயம். 1946-ல் சர் சாம்சட்ஜி காங்கா என்ற மூத்த வழக்குரைஞரிடம் இளம் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார் நானி பல்கிவாலா. அடுத்த சில ஆண்டுகளில், அவர் ‘வருமான வரிச் சட்டம் மற்றும் நடைமுறைகள்’ என்ற சிறந்த நூலை எழுதிமுடித்தார். அப்போது அவரின் வயது 30 தான். பல பத்தாண்டுகளாக இந்தப் புத்தகம் வருமான வரிகள் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகத் திகழ்ந்தது. வருமான வரி மற்றும் வணிக வரிச் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் புகழ்வாய்ந்த வழக்கறிஞராக விளங்கிய பல்கிவாலா, இந்தியாவின் முதல் இரண்டு சட்டக் குழுக்களிலும் (1955 மற்றும் 1958) உறுப்பினராக இருந்தவர்.   நிதிநிலை அறிக்கையின் விமர்சகர் 1958 தொடங்கி பொது நிகழ்ச்சிகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் தொடங்கினார் நானி பல்கிவாலா. மத்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளைப் பற்றி ஆய்வுச் சொற்பொழிவுகள் அப்படித் தொடங்கியதுதான். 1958 தொடங்கி 1994 வரை தொடர்ந்து நிதிநிலை ஆய்வுச் சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்திவந்தார். முதன்முதலில் மும்பையில் ஒரு ஹோட்டலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்தச் சொற்பொழிவு, பொதுமக்களின் ஆதரவைப் பெற்று பல்வேறு நகரங்களில் கிரிக்கெட் மைதானங்களில் நடத்துகிற அளவுக்கு செல்வாக்குப் பெற்றது. இறுதி ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சொற்பொழிவைக் கேட்கக் கூடினார்கள். ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் அனைத்து முக்கிய அம்சங்களையும், எல்லா மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் புள்ளிவிவரங்களோடு சொற்பொழிவாற்றினார். நிதிநிலை அறிக்கை பற்றிய தனது எண்ணங்கள், விமர்சனங்கள் மட்டுமின்றி, அரசின் வருவாயைப் பெருக்குவது, செலவுகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து ஆக்கபூர்வமான யோசனைகளையும் அளிப்பது அவரது வழக்கம். அவரின் நிதிநிலை அறிக்கை பற்றிய ஆய்வு நிதியமைச்சரின் அறிக்கைக்கு நிகராகப் பார்க்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம், துண்டுச் சீட்டுகூட இல்லாமல் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்பது இன்னொரு ஆச்சரியம்! இந்தியப் பொருளாதாரம், நீதித் துறை, அரசமைப்பு, சமுதாய ஒற்றுமை, நிதிநிலை அறிக்கைகள் பற்றிய ஆய்வு முதலான அவரது சிறந்த சொற்பொழிவுகள் ‘மக்களாகிய நாம்’ (1984) , ‘நாடாகிய நாம்’ (1994) என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு நூல்களிலும் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக ஆய்வுசெய்து, அறிமுக வாசகர்களுக்கும் எளிதில் புரியும்படி விளக்கியுள்ளார். ஆங்கில இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர் பல்கிவாலா. அவரின் எழுத்துகள் அனைத்திலும் உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் மேற்கோள்களைப் பார்க்க முடியும்.   அரசமைப்புச் சட்ட வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் 1973-ல் நடந்த கேசவானந்த பாரதி (எதிர்) கேரள அரசு என்ற முக்கியமான வழக்கில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மட்டுமே நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது, அதன் அடிப்படைகளை மாற்றுவதற்கு அதிகாரமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வழக்கில், நானி பல்கிவாலாவுக்கு முக்கிய பங்குண்டு. உலகளாவிய நீதித் துறை சிந்தனைகளை எடுத்துக்காட்டி தனது வாதங்களை எடுத்துவைத்தார் பல்கிவாலா. சர்வதேச நீதிமன்றங்களிலும் இந்தியாவின் சார்பாகப் பல்வேறு முக்கிய வழக்குகளில் நானி பல்கிவாலா வாதிட்டார். பிற நாட்டுச் சட்ட அறிஞர்கள், தமது வாதுரைகளை எழுதிவைத்துக்கொண்டு பேசியபோது, பல்கிவாலா மட்டும் கைகளில் குறிப்புகள் எதுவும் இல்லாமல் வாதாடி ஆச்சரியப்படுத்தினார். 1971-ல் சுதந்திரா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு நானி பல்கி வாலாவைக் கேட்டுக்கொண்டார் ராஜாஜி. ஆனால், அரசியல் சார்பற்றுத் தனித்துச் செயல்படவே தான் விரும்புவதாக வருத்தத்துடன் மறுத்துவிட்டார் பல்கிவாலா. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் இயக்குநராகவும் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். 1968 முதல் 2000 வரை ‘ஃபோரம் ஆஃப் ஃப்ரீ எண்டர்பிரைசஸ்’ அமைப்பின் தலைவராக விளங்கினார். மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த அமைப்பு, இந்திய அரசின் பொருளியல் கொள்கைகள் குறித்த விமர்சனங்களைப் புத்தகங்களாகத் தொடர்ந்து வெளியிட்டுவந்தது. 1977-ல் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நானி பல்கிவாலாவை நியமித்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர் அந்தப் பணியில் இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பையும்கூட அவர் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் சட்டத் துறை மற்றும் பொதுச் சேவைகளைப் பாராட்டி, 1998-ல் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான ‘பத்மவிபூஷண்’ வழங்கப்பட்டது. தனது 82-ம் வயதில் 2002 டிசம்பர் 11 அன்று மும்பையில் நானி பல்கிவாலா மரணமடைந்தார். தகுதிகள் இருந்தாலும் பதவிகளை விரும்பாதவர் அவர். 2004-ல் அவரது நினைவுச் சொற்பொழிவில் பேசிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ‘இந்தியா ஒரு சிறந்த சட்ட அமைச்சரைப் பெறாமல் போய்விட்டது’ என்று கூறினார். சட்ட அமைச்சரை மட்டுமல்ல, நல்ல ஒரு நிதியமைச்சரையும் இந்தியா இழந்துவிட்டது. அவரைப் போல் சட்டத் துறையிலும் பொருளியல் துறையிலும் ஒருசேர நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மிக அரிது. – பா.சந்திரசேகரன், பொருளியல் நிபுணர், தொடர்புக்கு: bc.sekaran04@gmail.com https://www.hindutamil.in/news/opinion/columns/537363-nani-palkhivala-3.html Facebook Instagram X-twitter

நானி பல்கிவாலா: நீதித் துறை அறிஞரின் பொருளியல் முகம் Read More »